இந்தியாவில் ஆடி ஏ4 செடான் காரின் ஸ்போர்ட் வேரியண்ட் அறிமுகம்!

By Saravana

இந்தியாவில் ஆடி ஏ4 செடான் காரின் ஸ்போர்ட் வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆடி ஏ4 செடான் காரின் டீசல் மாடலின் புதிய மிட் வேரியண்ட்டாக இது விற்பனைக்கு நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. இதுதவிர, சிறிய மாறுதல்களும், கூடுதல் சிறப்பம்சங்களும் இந்த மாடலில் உண்டு.

ஆடி ஏ4 சொகுசு கார்

புதிய டிசைன் கொண்ட பம்பர் கிட், 20 ஸ்போக்ஸ் 17 இஞ்ச் அலாய் வீல்கள், கண்ணாடி கூரை போன்றவை முக்கிய அம்சங்கள்.

சிவப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரு வண்ணங்களில் கிடைக்கும். ஸ்டான்டர்டு மாடலில் டியூவல் டோன் இன்டிரியர் பயன்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், இந்த புதிய ஸ்போர்ட் மாடலில் கருப்பு வண்ண இன்டிரியர் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வேரியண்ட்டில் 177 பிஎச்பி பவரையும், 380என்எம் டார்க்கையும் வழங்கும் 2.0 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. ரூ.39.95 லட்சம் மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கும்.

வரும் 25ந் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய பென்ஸ் சி கிளாஸ் கார் மற்றும் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார்களுக்கு இது நேரடியாக போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 18, 2014, 9:26 [IST]
English summary
Audi has launched several products and facelifts among their Indian portfolio. They have now announced the launch of their A4 sport variant. The German luxury car manufacturer has priced its sedan at INR 39,95,000 ex-showroom, Mumbai.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+