மேம்படுத்தப்பட்ட ஆடியின் புதிய ஏ8எல் சொகுசு ரதம் விற்பனைக்கு வந்தது

By Saravana

மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கொண்ட ஆடியின் புதிய ஏ8எல் சொகுசு செடான் கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சி துபாயில் நடந்தது.

ஆடி இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஜோ கிங் மற்றும் ஹாலிவுட் நடிகர் நிகோலஸ் கேஜ் ஆகியோர் இந்த புதிய மாடல் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த புதிய காரில் இருக்கும் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் வழங்கியுள்ளோம்.


கஸ்டமைசேஷன் ஆப்ஷன்கள்

கஸ்டமைசேஷன் ஆப்ஷன்கள்

மொத்தம் 111 வெளிப்புற வண்ணங்கள், 23 விதமான வண்ணங்களில் லெதர்கள், 27 கஸ்டமைஸ் ஆக்சஸெரீஸ்கள் மற்றும் 12 விதமான மரவேலைப்பாடுகளை தேர்வு செய்து கொள்ளும் விதத்தில் ஆடி ஏ8எல் கார் கிடைக்கிறது. இதுதவிர, ஹெட்ரெஸ்ட் லோகோவில் வாடிக்கையாளர்களின் இனிஷியல்களையும் பொறித்து பெற்றுக்கொள்ளலாம். இதுதவிர, மேட்ரிக்ஸ் ஹெட்லைட்டுகளுடன் கிடைக்கிறது.

இதர வசதிகள்

இதர வசதிகள்

ஏர் சஸ்பென்ஷன், வென்டிலேஷன் அமைப்புடன் இருக்கைகள், சர்ரவுண்ட் மியூசிக் சிஸ்டம், பார்க் அசிஸ்ட், சர்ரவுண்ட் வியூ கேமரா, பானரோமிக் சன்ரூஃப், ஹெட் அப் டிஸ்ப்ளே, ஆடியின் வயர்லெஸ் இன்டர்நெட் கனெக்ஷன், மசாஸ் இருக்கைகள் என வசதிகளின் பட்டியல் நீள்கிறது.

எஞ்சின் ஆப்ஷன்கள்

எஞ்சின் ஆப்ஷன்கள்

ஆடியின் புதிய ஏ8எல் கார் ஒரு பெட்ரோல் மற்றும் இரு விதமான டீசல் மாடல்களில் விற்பனைக்கு வந்துள்ளது. 435 எச்பி பவர் கொண்ட வி8 பைடர்போ பெட்ரோல் எஞ்சின், 250 எச்பி பவர் கொண்ட 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 385 எச்பி பவரை அளிக்கும் 4.2 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் கிடைக்கிறது.

விலை

விலை

ரூ.11,295,000 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும், ரூ.11,143,000 மும்பை எக்ஸ்ஷோரூம் விலையிலும் புதிய ஆடி ஏ8எல் சொகுசு கார் விற்பனைக்கு கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, May 5, 2014, 11:26 [IST]
English summary
Audi has brought its flagship model to India. The Audi A8L for India was launched in a special event held in Dubai. The A8L is the most luxurious mainstream sedan offered by Audi featuring hand crafted interiors, the latest in technology and a bevy of customization options.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+