ஆடி க்யூ 3 பெட்ரோல் மாட ல் அறிமுகம்.. ரொம்ப பவர்ஃபுல்!

கடந்த ஆண்டு ஜூலையில் அறிமுகம் செய்யப்பட்ட க்யூ3 எஸ்யூவிக்கு இந்திய மார்க்கெட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. விற்பனையிலும் ஆடி நிறுவனத்துக்கு முக்கிய பங்களிப்பை கொடுத்து வருகிறது.
ஆனால், டீசல் மாடலில் மட்டுமே முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரில் 177 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது. இது ஒரு வகையில் வாடிக்கையாளர்களை கவர்ந்தாலும், பெர்ஃபார்மென்ஸ் விரும்பிகளுக்கு பெட்ரோல் மாடல் இல்லாதது குறையாக இருந்து வந்தது.
இந்த குறையை தற்போது ஆடி போக்கியிருக்கிறது. ஆம், க்யூ3 எஸ்யூவியின் பெட்ரோல் மாடலையும் தற்போது விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறது ஆடி நிறுவனம்.
புதிய பெட்ரோல் மாடல் க்யூ3 எஸ்யூவியில் 2.0 லிட்டர் டிஎஃப்எஸ்ஐ எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 211 பிஎச்பி ஆற்றலையும், 300 என்எம் முடுக்கு விசையையும் வெளிப்படுத்தும். டீசல் மாடல் போன்றே இதிலும் 7 ஸ்பீடு எஸ் டிரானிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது.
4 வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளதால் க்யூ3 தற்போது முழுமையான என்ட்ரி லெவல் சொகுசு எஸ்யூவியாக மாறியிருக்கிறது. ரூ.27.37 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில்(மஹாராஷ்டிரா) புதிய க்யூ3 விற்பனைக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








