ஆடியின் எஸ்6 பெர்ஃபார்மென்ஸ் செடான் கார் விற்பனைக்கு வந்தது
ஃபேஸ்புக்கில் டீசர் படத்தை வெளியிட்டு ஆட்டோமொபைல் பிரியர்கள் மற்றும் ரசிகர்களை ஏகத்துக்கும் உசுப்பேற்றி வந்த ஆடி இன்று எஸ்6 செடான் காரை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. அனைத்து ரக கார்களின் விலையையும் 4 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்த கையோடு இந்த புதிய காரையும் விற்பனைக்கு விட்டுள்ளது.
பிஎம்டபிள்யூ எம்5, மெர்சிடிஸ் பென்ஸ் இ63 ஏஎம்ஜி ஆகிய கார்களுக்கு போட்டியை கொடுக்கும் விதத்தில் ஏ6 செடான் காரின் பெர்ஃபார்மென்ஸ் வேரியண்ட்டாக இந்த புதிய காரை களமிறக்கி இருக்கிறது ஆடி. பெர்ஃபார்மென்ஸ் செடான் ரகத்தில் வந்திருக்கும் இந்த புதிய சொகுசு கார் குறித்த கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

தோற்றம்
எல்இடி ஹெட்லைட்டுகள், ஆடி லோகோவுடன் முன்பக்க கிரில், பகல் நேர ரன்னிங் விளக்குகளுடன் படு ஸ்போர்ட்டியான தோற்றத்துடன் வசீகரிக்கிறது ஆடி எஸ்6.

எஞ்சின்
4.0 லிட்டர் வி8 டிஎஃப்எஸ்ஐ எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 7 ஸ்பீடு எஸ் ட்ரோனிக் டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷன் துணைபுரியும். ஆடி ஏ6 காரில் 3.0 லிட்டர் டிஎஃப்எஸ்ஐ எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

குவாட்ரோ சிஸ்டம்
இந்த கார் ஆடியின் குவாட்டோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது.

பவர்
அதிகபட்சமாக 420 பிஎச்பி பவரையும், 550 என்எம் டார்க்கையும் இதன் எஞ்சின் அளிக்கும்.

எடை
இந்த கார் 1,895 கிலோ எடை கொண்டது.

உந்துசக்தி
கிட்டத்தட்ட 2 டன் எடையை நெருங்கும் இந்த கார் 0-100 கிமீ வேகத்தை 4.8 வினாடிகளில் கடந்துவிடும்.

டாப் ஸ்பீடு
மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும் தகவமைப்புகள் நிரம்ப பெற்றது.

மைலேஜ்
இந்த கார் லிட்டருக்கு 10.3 கிமீ மைலேஜ் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரத்யேக அம்சம்
இந்த காரின் எஞ்சின் 8 சிலிண்டர்கள் கொண்டது. ஆனால், காரில் பயணிகள் அல்லது பொருட்களின் எடைக்கு தகுந்தவாறு 8 சிலிண்டர்களில் 4 சிலிண்டர்கள் மூடப்பட்டுவிடும்.

இறக்குமதி
இந்த எஸ்6 செடான் கார் இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது.

விலை
ரூ.85.99 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








