காதலர் தின பரிசாக புதிய எக்ஸ்1 காரை அறிமுகப்படுத்தும் பிஎம்டபிள்யூ
இந்தோனேஷியாவில் சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கொண்ட எக்ஸ்1 காரை பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்தது. இதனைத்தொடர்ந்து, வரும் 14ந் தேதி இந்த புதிய மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது பிஎம்டபிள்யூ.
இளம் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் அம்சங்கள் கொண்ட இந்த காரை காதலர் தினத்தில் அறிமுகப்படுத்த இருப்பதாக பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது. தற்போது விற்பனையில் இருக்கும் எக்ஸ்1 காரைவிட பல்வேறு விதத்திலும் மேம்பட்டிருக்கும் புதிய பிஎம்டபிள்யூ காரின் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

தோற்றம்
கச்சிசமான சொகுசு காரான பிஎம்டபிள்யூ இளம் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் வெளிப்புற டிசைனை கொண்டுள்ளது.வெளிப்புற டிசைனில் தற்போது மாற்றங்களுடன் வருகிறது.

மாற்றங்கள்
ஹெட்லைட்டில் மாற்றங்கள் இல்லை. அதேவேளை, டெயில் லைட், ரியர் வியூ டிசைனில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

முகப்பு மாற்றம்
முன்புற கிரில் மற்றும் பம்பர், ரேடியேட்டர் கிரில், பனி விளக்குகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு ஒரு கெத் லுக்கை கொண்டிருப்பதை படத்தில் காணுங்கள்.

எஞ்சின்
எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் மாடலில் இருக்கும் அதே எஞ்சின் ஆப்ஷன்களுடன் வருகிறது. தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் 150 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 177 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் டர்போசார்ஜர் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின்களுடன் கிடைக்கும்.

அலாய் வீல்
புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்கள் மற்றும் புதிய வண்ணங்களில் வருகிறது.

குரோம் பினிஷிங்
சென்ட்ரல் கன்சோல் குரோம் பினிஷிங் மற்றும் ஸ்டீயரிங்கில் அலுமினிய பினிஷிங் எக்ஸ்1 காரின் இன்டிரியரின் அந்தஸ்தை கூட்டுகிறது.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 - படங்கள்

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 - படங்கள்

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 - படங்கள்

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 - படங்கள்

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 - படங்கள்

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 - படங்கள்

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 - படங்கள்

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 - படங்கள்



Click it and Unblock the Notifications








