ரூ.1.75 கோடி விலையில் புதிய பிஎம்டபிள்யூ எம்6 கிரான்கூபே கார் அறிமுகம்
கடந்த டெல்லி ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய பிஎம்டபிள்யூ எம்6 கிரான்கூபே கார் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 6 சீரிஸ் காரின் அடிப்படையில்தான் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மிக அசத்தலான டிசைனுடன் வந்திருக்கும். இந்த புதிய கார் கோடீஸ்வர வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்று கூறலாம். இந்த புதிய காரில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

வெளிப்புற டிசைன்
ஒட்டுமொத்தமாக அழகுதான். வெளிப்புறத்தில் குறிப்பிட்டு கூற வேண்டுமெனில், 20 இஞ்ச் அலாய் வீல்கள், டியூவல் எக்ஸ்சாஸ்ட் பைப்புகள், கூரை அமைப்பு போன்றவற்றை கூறலாம். இதன் கூரை உயர் தர கார்பன் ஃபைபர் கலவையில் இலகு எடை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இது சிறந்த ஏரோடைனமிக் கொண்ட கார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்டிரியர்
இதன் இன்ரியரில் மெரினோ லெதர் அப்ஹோல்ஸ்டரி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஸ்போர்ட்ஸ் இருக்கைகள், மல்டி பங்ஷன் ஸ்டீயரிங் வீல் போன்றவை சிறப்பம்சங்களாக இருக்கின்றன.

எஞ்சின்
1870 கிலோ எடை கொண்ட இந்த காரில் 560 எச்பி ஆற்றல் கொண்ட 4.4 லிட்டர் 8 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 0- 100 கிமீ வேகத்தை 4.2 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மமிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும் ஆற்றல் கொண்டது. 7 ஸ்பீடு டபுள் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டு இருக்கிறது.

மைலேஜ்
100 கிலோமீட்டர் தூரத்துக்கு 9.9 லிட்டர் எரிபொருள் செலவாகும் என்று பிஎம்டபிள்யூ தெரிவிக்கிறது. இந்த கார் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








