பவர்ஃபுல் போலோவுக்கு முன்பதிவு துவங்கியது
பவர்ஃபுல் ஃபோக்ஸ்வேகன் போலோ காருக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. ரூ.50,000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது விற்பனையில் இருந்து வந்த பவர்ஃபுல் போலோ கார் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கு போதிய வரவேற்பு இல்லாததால் தற்போது சூப்பர் சார்ஜர்கள் துணையுடன் இயங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் மாடலை ஃபோக்ஸ்வேகன் களமிறக்குகிறது.

போலோ ஜிடி என்ற பெயரில் வரும் இந்த புதிய காரின் எஞ்சின் அதிகபட்சமாக 105 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். மேலும், 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிஎஸ்ஜி கியர் பாக்ஸ் கொண்டதாக வருகிறது.
இந்த கார் லிட்டருக்கு 17.2 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டூயல் டோன் இன்டிரியர், ஜிடி பேட்ஜ் ஆகியவை பவர்ஃபுல் போலோவை வித்தியாசப்படுத்தும். வரும் 29ந் தேதி விலை உள்ளிட்ட விபரங்கள் அறிவிக்கப்பட உள்ளன. மே முதல் வாரத்தில் டெலிவிரி துவங்க உள்ளது. டூயல் ஏர்பேக்ஸ் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளும் இருக்கும்.


Click it and Unblock the Notifications








