பட்ஜெட் எதிரொலி: எஸ்யூவி கார்கள் விலை ரூ.60,000 உயர்கிறது

மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி கார்கள் மீதான வரி 75 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாகவும், 800 சிசிக்கும் அதிக திறன் கொண்ட பைக்குகளுக்கான வரி 60 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோன்று, அதிவேக வளர்ச்சி கண்டு வரும் யுட்டிலிட்டி ரக கார்கள் மீதான வரி 27 சதவீதத்திலிரு்நது 30 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
1500 சிசி திறன் கொண்ட பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் கொண்ட கார்கள், 4 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட கார்கள் மற்றும் 170 மிமீ.,க்கும் அதிகமான கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட எந்தவொரு கார்களுக்கும் இந்த வரி உயர்வு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், எஸ்யூவி மற்றும் எம்பிவி ரக கார்களின் விலை கணிசமாக உயர்க்கிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி, டொயோட்டா இன்னோவா, மஹிந்திரா ஸைலோ உள்ளிட்ட யுட்டிலிட்டி ரக கார்களின் விலை மாடலுக்கு தகுந்தவாறு ரூ.20,000 முதல் ரூ.60,000 வரை அதிகரிக்கிறது.


Click it and Unblock the Notifications








