ஸ்கோடா ரேபிட் வாங்கினால் ஃபேபியா இலவசம்: டீலரின் அதிரடி ஆஃபர்

கார் மார்க்கெட்டில் போட்டியை சமாளிக்க பல்வேறு அதிரடி அறிவிப்புகளை கார் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. ஸ்பெஷல் எடிசன், விலை குறைப்பு, லட்ச ரூபாய்க்கு சலுகைகள் என ஒருபக்கம் சரவெடியாய் அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்றுவிட்டது குஜராத்தை சேர்ந்த ஸ்கோடா கார் நிறுவனத்தின் டீலரான டார்க் ஆட்டோ. ஆம், ரேபிட் கார் வாங்கினால் ஃபேபியா காரை இலவசமாக வழங்கும் அதிரடி திட்டத்தை டார்க் ஆட்டோ அறிவித்துள்ளது.

ரேபிட் வாங்கினால் ஃபேபியா இலவசம்

ரேபிட் வாங்கினால் ஃபேபியா இலவசம்

இந்த அதிரடி சலுகை திட்டம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கார் வாங்கும் கனவை ஒத்திப் போட்டவர்கள் கூட இப்போது தலைதெறிக்க அந்த டீலர் பக்கம் ஓடுகின்றனராம்.

ரேபிட் வாங்கினால் ஃபேபியா இலவசம்

ரேபிட் வாங்கினால் ஃபேபியா இலவசம்

ரேபிட் கார் மீது தற்போது ஒரு லட்ச ரூபாய்க்கு தள்ளுபடி வழங்குகிறது ஸ்கோடா. இந்த தள்ளுபடியை வேண்டாம் என்று சொல்லும் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில், அதாவது 2018ம் ஆண்டு புதிய ஃபேபியா காரை இலவசமாக வழங்குவதாக வாடிக்கையாளர்களிடம் உத்தரவாதம் வழங்கியுள்ளார் சம்பந்தப்பட்ட டீலர்.

ரேபிட் வாங்கினால் ஃபேபியா இலவசம்

ரேபிட் வாங்கினால் ஃபேபியா இலவசம்

ஒரு லட்ச ரூபாய் தள்ளுபடிக்கு கிடைக்கும் வட்டியை வைத்து புதிய காரை கண்டிப்பாக வழங்குவதாக ஸ்கோடா டீலர் விளக்கமளித்துள்ளார்.

ரேபிட் வாங்கினால் ஃபேபியா இலவசம்

ரேபிட் வாங்கினால் ஃபேபியா இலவசம்

இதனால், ரேபிட் விற்பனை சூடுபிடித்துள்ளதாக அந்த டீலர் தெரிவித்துள்ளார். இந்த சிறப்பு திட்டத்தின் மூலம் 600 கார்கள் விற்பனையாகி இருக்கிறதாம்.

ரேபிட் வாங்கினால் ஃபேபியா இலவசம்

ரேபிட் வாங்கினால் ஃபேபியா இலவசம்

இருப்பு இருந்த ரேபிட் கார்கள் அதிரடியாக விற்றதோடு, பல்க் ஆர்டர் போடும் அளவுக்கு நிலைமை சென்றுவிட்டதாம்.

ரேபிட் வாங்கினால் ஃபேபியா இலவசம்

ரேபிட் வாங்கினால் ஃபேபியா இலவசம்

எப்படியும் ஃபேபியா கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தற்போது ரேபிட்டுக்கு முன்பதிவும் எகிறி வருகிறதாம்.

ரேபிட் வாங்கினால் ஃபேபியா இலவசம்

ரேபிட் வாங்கினால் ஃபேபியா இலவசம்

இந்த திட்டத்தை நாமும் கையில் எடுக்காலாமா என்று பல டீலர்களும் கூட்டிக் கழித்துக் கொண்டு தலையை பிய்த்துக் கொண்டு இருக்கிறார்களாம். சரிவருவமா, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியுமா என்பது அவர்களது இந்த மண்டைக் காய்ச்சலுக்கு காரணம்.

வென்ட்டோவுக்கு அதிரடி ஆஃபர்

வென்ட்டோவுக்கு அதிரடி ஆஃபர்

ஸ்கோடாவின் தாய் நிறுவனமான ஃபோக்ஸ்வேகனும் தன் பங்குக்கு சலுகைகளை வென்ட்டோ செடான் காருக்கு அறிவித்துள்ளது. பழைய காரை விற்றுவிட்டு, அதில் கிடைக்கும் பணத்தை செலுத்தி வென்ட்டோவை ஓட்டிச் செல்லலாம். ஒரு ரூபாய் மட்டும் கூடுதலாக கொடுத்தால் போதுமானது. ஏழு ஆண்டுகளுக்கு மீதிப் பணத்தை செலுத்த தேவையில்லை.

வென்ட்டோவுக்கும் அதிரடி ஆஃபர்

வென்ட்டோவுக்கும் அதிரடி ஆஃபர்

அதன் பின் முழுப் பணத்தையும் அல்லது 36 மாதத் தவணைகளாகவோ கட்டலாம் என்று தெரிவித்துள்ளது. இதுதவிர, வென்ட்டோவிற்கு மற்றொரு திட்டமும் அமலில் உள்ளது. வென்ட்டோவுக்கு 50 சதவீத பணத்தை முன்பணமாக செலுத்தினால் போதுமானது. மீதித் தொகையை ஓர் ஆண்டுக்கு பிறகு செலுத்தலாம் என்று ஃபோக்ஸ்வேகன் கூறியிருக்கிறது.

வென்ட்டோவுக்கும் அதிரடி ஆஃபர்

வென்ட்டோவுக்கும் அதிரடி ஆஃபர்

ஒரு பவுடர் டப்பாவுக்கு இன்னொன்று இலவசம் என்பது போல் கடும் சந்தை போட்டியால் கார்களும் இதே யுக்தியை பயன்படுத்தி தற்போது விற்பனையை அதிகரிக்க முயன்று வருகின்றனர் கார் தயாரிப்பாளர்கள். இதற்கு கைமேல் பலன் கிடைத்திருப்பதாக டீலர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 6, 2013, 13:39 [IST]
English summary
Torque Auto, a Skoda dealership in Gujarat is offering a free Fabia hatchback to anyone who buys a Skoda Rapid. Skoda Fabia will be given under conditions.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+