12 ஆண்டுகளில் இல்லாத அளவு கார் விற்பனை சரிவு: உற்பத்தி குறைப்பு

பொருளாதார தேக்கநிலை தற்போது கார் மார்க்கெட்டை வெகுவாக பாதித்துள்ளது. இதன் எதிரொலியாக கார் விற்பனை கடந்த சில மாதங்களாக படு மந்தமான நிலையை எட்டியுள்ளது.
கடந்த மாதம் 1,58,513 கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை ஒப்பிடும்போது 25 சதவீதம் குறைந்துள்ளது. மேலும், தொடர்ந்து 4வது மாதமாக கார் விற்பனை சரிவை கண்டிருப்பதால், கார் நிறுவனங்கள் கவலையில் ஆழ்ந்துள்ளன.
கார் விற்பனையை ஊக்குவிக்க சலுகைகள், தள்ளுபடிகள் கொடுத்தும் பலனில்லை. இதன் காரணமாக டீலர்களில் இருப்பு அதிகமாகிக் கொண்டே போகிறது.
இதையடுத்து, கார் உற்பத்தியை மாருதி, டாடா உள்ளிட்ட நிறுவனங்கள் குறைத்துள்ளன. டீலர்களில் ஒன்றரை மாதங்களாக இருப்பு தேங்கி நிற்பதால் மாருதி நிறுவனம் கடந்த சனிக்கிழமை ஒருநாள் பெட்ரோல் கார் உற்பத்தியை நிறுத்திவைத்தது.
இதேபோன்று, பல முன்னணி கார் நிறுவனங்களும் கார் உற்பத்தியை குறைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








