செவர்லே பீட் மற்றும் செயில் கார்களின் லிமிடேட் எடிசன் மாடல்கள் அறிமுகம்!

இங்கிலாந்தின் மான்செஸ்ட்டர் யுனைடைட் கால் பந்து அணியுடன் இணைந்துள்ளதை கொண்டாடும் விதத்தில், இந்தியாவில் செவர்லே கார் நிறுவனம் பீட் மற்றும் செயில் கார்களின் லிமிடேட் எடிசன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த மான்செஸ்ட்டர் யுனைடைட் கால் பந்து அணிக்கு செவர்லே ஸ்பான்சராக ஒப்பந்தம் செய்துள்ளது. மான்செஸ்ட்டர் யுனைடைட் அணி வீரர்களுக்கான புதிய ஜெர்ஸியில் செவர்லே நிறுவனத்தின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

மான்செஸ்ட்டர் யுனைடைட் கால் பந்து அணியுடன் ஏற்பட்டிருக்கும் உறவை கொண்டாடும் விதத்தில் தற்போது இந்தியாவில் கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட லிமிடேட் எடிசன் கார் மாடல்களை செவர்லே அறிமுகம் செய்துள்ளது. பீட் மற்றும் செயில் ஹேட்ச்பேக் கார்களில் இந்த புதிய லிமிடேட் எடிசன் மாடல்கள் வந்துள்ளன.

சிவப்பு வண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு மான்செஸ்ட்டர் யுனைடைட் அணியின் பாடி டீக்கெல் சின்னம் பொறிக்கப்பட்டதாக இந்த லிமிடேட் எடிசன் பீட் மற்றும் செயில் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

மான்செஸ்ட்டர் யுனைடைட் அணியின் பேட்ஜ் பொறிக்கப்பட்ட சீட் கவர்கள், சில் பிளேட்டுகள், இண்டிகேட்டர்கள் கொண்ட ரியர் வியூ கண்ணாடிகள், ரூஃப் ரெயில், பொழுதுபோக்கு சாதனங்கள் போன்ற கூடுதல் ஆக்சஸெரீஸ்கள் இந்த லிமிடேட் எடிசன் மாடல்களில் இடம்பெற்றிருக்கின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் எல்எஸ் வேரியண்ட்டில் இந்த லிமிடேட் எடிசன் கிடைக்கும். சாதாரண மாடலைவிட ரூ.69,000 கூடுதல் விலையில் இந்த லிமிடேட் எடிசன் கிடைக்கும்.

இந்த நிலையில், அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் வரும் 23ந் தேதி நடைபெறும் போட்டியில் அமெரிக்க கால் பந்து அணியுடன், இங்கிலாந்தின் மான்செஸ்ட்டர் யுனைடைட் கால் பந்து அணி செவர்லே லோகோ போடப்பட்ட ஜெர்ஸியுடன் முதல்முறையாக களமிறங்குகிறது.

Chevy Jersy

இதற்காக இந்தியாவில் சிறப்பு பரிசுப் போட்டி ஒன்றையும் செவர்லே அறிவித்துள்ளது. "செவர்லே ஃபாஸ்ட் மூவ்" என்ற பெயரில் நாளை நடைபெறும் இந்த போட்டியில் குலுக்கல் முறையில் வெற்றி பெறும் இரண்டு பேருக்கு கலிஃபோர்னியாவில் நடைபெறும் கால் பந்து போட்டியை பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். மேலும், மான்செஸ்ட்டர் யுனைடைட் அணியின் ஜெர்ஸியும் வழங்கப்பட உள்ளது. வரும் 10ந் தேதி குலுக்கலில் வெற்றி பெற்றவர்களின் பெயர் விபரம் அறிவிக்கப்படும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 8, 2014, 16:22 [IST]
English summary
Chevrolet will be promoted in the English Premier League Football team of Manchester United. General Motors India have prepared limited edition models to celebrate their Manchester United connection. A special livery will be provided to the Beat and Sail hatchback in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+