தளும்பும் வசதிகளுடன் 'ஸ்பெஷல்' செவர்லே செயில் கார்கள் அறிமுகம்!
கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட செவர்லே செயில் செடான் மற்றும் ஹேட்ச்பேக் கார்களை ஜெனரல் மோட்டார்ஸ் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
லிமிடேட் எடிசனாக விற்பனை செய்யப்பட இருக்கும், இந்த இரு கார் மாடல்களிலும் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள் மற்றும் இதர விபரங்கள ஸ்லைடரில் விபரமாக காணலாம். முதல் மூன்று ஸ்லைடுகளில் செயில் செடான் காரின் லிமிடேட் எடிசன் மாடலின் விபரங்களும், அடுத்த மூன்று ஸ்லைடுகளில் செயில் யுவா ஹேட்ச்பேக் காரின் விபரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆக்சஸெரீஸ் பேக்
பூட் லிட்டில் லிமிடேட் எடிசன் பேட்ஜ் பதிக்கப்பட்டிருக்கிறது. பக்கவாட்டில் ஸ்பெஷல் எடிசன் டீகெல்கள், ரியர் வியூ கண்ணாடியில் இண்டிகேட்டர்கள், குரோம் பினிஷிங் செய்யப்பட்ட பூட் லிட், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், செயில் பேட்ஜ் கொண்ட சில் பிளேட்டுகள், டியூவல் டோன் வண்ணம் கொண்ட இருக்கை கவர்கள், தலையணைகள் போன்றவை சிறப்பு ஆக்சஸெரீஸ்களாக இடம்பெற்றிருக்கின்றன. இந்த கூடுதல் ஆக்சஸெரீஸ்களின் மதிப்பு ரூ.5.36 லட்சம் என்று ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

எஞ்சின்
செவர்லே செயில் செடான் பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், டீசல் மாடலில் 1.3 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 18.2 கிமீ மைலைஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 22.1 கிமீ மைலேஜையும் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை
ரூ.5.36 லட்சம் முதல் விலையில் கிடைக்கும் செயில் செடானின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் இந்த லிமிடேட் எடிசன் ஆக்சஸெரீஸ் பேக்குடன் வாங்கிக் கொள்ள முடியும்.

ஆக்சஸெரீஸ் பேக்
செயில் செடான் காரில் இடம்பெற்றிருக்கும் அனைத்து ஆக்சஸெரீஸ்களும் செயில் யுவா லிமிடேட் எடிசன் மாடலுக்கும் கிடைக்கும். ஆனால், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் மட்டும் இடம்பெறவில்லை. அதேவேளை, ரூஃப் ரெயில்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

எவ்வளவு பலன் கிடைக்கும்?
செவர்லே செயில் யுவா லிமிடேட் எடிசன் காருக்கு ரூ.14,300 மதிப்புடைய ஆக்சஸெரீஸ்களையும், ரூ.28,000 மதிப்புடைய சேமிப்பு சலுகைகளையும் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை
எஞ்சின் ஆப்ஷன்களில் மாற்றங்கள் இல்லை. செயில் செடான் கார்களில் இருக்கும் அதே எஞ்சின் ஆப்ஷன்கள்தான் இந்த காரிலும் இருக்கிறது. ரூ.4.44 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








