சவாலான விலையில் புதிய செயில் செடான்: செவர்லே அறிமுகம்
ரூ.4.99 லட்சம் என்ற சவாலான ஆரம்ப விலையில் புதிய செயில் செடான் காரை சற்றுமுன் அறிமுகம் செய்தது செவர்லே.
அதிக இடவசதியுடனும், பொருட்களை வைப்பதற்கான 370 லிட்டர் கொள்ளளவுடன் தாராள பூட் ரூம் கொண்டதாக வந்திருக்கிறது செவர்லே செயில் செடான்.

86 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 78 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. 5 ஸ்பீட் கியர் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டிருக்கிறது. இந்திய சாலை நிலைகளுக்கு ஏற்ப சிறந்த சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டிருப்பதாக செவர்லே தெரிவித்துள்ளது.
செயில் ஹேட்ச்பேக் காரின் செடான் வெர்ஷன் என்பதால் ஒரே இன்டிரியர்தான் இந்த காரிலும் இருக்கிறது. மாருதி டிசையர், டொயோட்டா எட்டியோஸ், மஹிந்திரா வெரிட்டோ மற்றும் ஃபோர்டு கிளாசிஸ் ஆகிய என்ட்ரி லெவல் செடான் கார்களுடன் போட்டி போடும்.
ரூ.4.99 லட்சம் முதல் ரூ.6.41 லட்சம் வரையில் பெட்ரோல் வேரியண்ட்களும், ரூ.6.29 லட்சம் முதல் ரூ.7.51 லட்சம் வரையிலான விலைகளில் டீசல் வேரியண்ட்களும் கிடைக்கும். இவை அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை விபரங்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications








