சென்னையில் செயில் செடான் அறிமுகம் - ஆன்ரோடு விலை விபரம்
சென்னையில் செவர்லே செயில் செடான் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.5.91 லட்சம் ஆன்ரோடு விலையில் பேஸ் வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது. சென்னையில் நடந்த விழாவில் செயில் செடான் காரை ஜெனரல் மோட்டார்ஸ் துணைத் தலைவர் பி.பாலேந்திரன் அறிமுகம் செய்தார்.
பெங்களூரிலுள்ள ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த வடிவமைப்பு நிபுணர்களின் 2 ஆண்டுகள் கடின உழைப்பில் இந்தியாவுக்கான காராக செயில் செடான் மாற்றப்பட்டிருக்கிறது.

86 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 78 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின்களுடன் செயில் செடான் வந்துள்ளது. 5 ஸ்பீட் கியர் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டிருக்கிறது.
பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 18.2 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 22.1 கிமீ மைலேஜையும் தரும் என அராய் சான்றளித்துள்ளது.
சென்னை ஆன்ரோடு விலை விபரம்
பெட்ரோல் வேரியண்ட்கள்
பிஎஸ்- ரூ.5,91,116
எல்எஸ்- ரூ.6,49,424
எல்எஸ்(ஓ)- ரூ.6,73,769
எல்டி - ரூ.7,56,008
டீசல் வேரியண்ட்கள்
பிஎஸ் -ரூ.7,41,814
எல்எஸ்ரூ.7,76,938
எல்எஸ்(ஓ)-ரூ.8,01,282
எல்டி - ரூ.8,83,461


Click it and Unblock the Notifications








