டெல்லியில் அறிமுகமாகிறது நிசானின் பட்ஜெட்பிராண்டு டட்சன் கார்!

டெல்லி அருகே, குர்கானில் உள்ள பிரம்மாண்டமான கிங்க்டம் ஆஃப் ட்ரீம்ஸ்(Kingdom of Dreams)பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள அரங்கத்தில் இதற்கான விழா ஜூலை 15ம் தேதி நடைபெற உள்ளது. ரெனோ-நிசான் கூட்டு நிறுவனத்தின் சிஇஓ கார்லோஸ் கோஸின் டட்சன் பிராண்டின் முதல் காரை அறிமுகப்படுத்துவார் என தெரிகிறது.
அடுத்த ஆண்டு மத்தியில் இந்த புதிய பட்ஜெட் கார் நம் நாட்டு மார்க்கெட்டில் முதலில் விற்பனைக்கு வர உள்ளது. இதைத்தொடர்ந்து, இந்தோனேஷியா, தென் ஆப்ரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வளர்ந்து வரும் கார் மார்க்கெட்டுகளில் இந்த புதிய கார் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும்.
ரூ.4 லட்சத்துக்கும் குறைவான விலையில் இந்தியாவில் டட்சனின் முதல் கார் விற்பனைக்கு வர இருக்கிறது. தவிரவும், ரூ.3.5 லட்சத்தை தாண்டாத வகையில் இந்த காரின் விலையை நிர்ணயிக்கவும் நிசான் முடிவு செய்து வைத்துள்ளது.
இந்த கார் பிரிமியம் ஹேட்ச்பேக் கார்கள் அளவுக்கு ஸ்டைலாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. 3 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் கே2 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.
2016ம் ஆண்டுக்குள் மொத்தம் 10 கார்களை டட்சன் பிராண்டில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு நிசான் திட்டமிட்டுல்ளது. 32 ஆண்டுகளுக்கு பின் டட்சன் பிராண்டில் மீண்டும் கார்களை நிசான் அறிமுகம் செய்ய உள்ளது.


Click it and Unblock the Notifications








