ரூ.3.12 லட்சம் ஆரம்ப விலையில் டட்சன் கோ கார் விற்பனைக்கு வந்தது!
பெரும் எதிர்பார்ப்பை கிளறியிருக்கும் டட்சன் கோ கார் டெல்லியில் நடந்த விழாவில் சற்றுமுன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மறுபிறப்பு எடுத்துள்ள நிசான் குழுமத்தின் டட்சன் பிராண்டில் வெளிவந்திருக்கும் முதல் கார் மாடல் இது.
மாருதி ஆல்ட்டோ கே10, ஹூண்டாய் இயான் போன்ற கார்களுக்கு நேரடி போட்டியை கொடுக்கும். இந்த காரின் கூடுதல் சிறப்பம்சங்கள், போட்டியாளர்களுடனான விலை ஒப்பீட்டு விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்பில் இருங்கள்!

வேரியண்ட்டுகள்
DAT என்பதை குறிக்கும் விதத்தில் D, A,T ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும்.

சிறப்பம்சங்கள்
5 பேர் செல்வதற்கான சிறப்பான இடவசதி, ஃபாலோ மீ ஹெட்லைட்டுகள், ஸ்மார்ட்போனுக்கான மொபைல் டாக்கிங் ஸ்டேஷன், ஆட்டோ ஸ்பீடு கன்ட்ரோல் வைப்பர்கள், ஸ்மார்ட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் போன்ற சிறப்பம்சங்களுடன் வந்துள்ளது டட்சன் கோ.

எஞ்சின்
இந்த காரில் நிசான் மைக்ராவில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 67 பிஎச்பி ஆற்றலையும், 108 என்எம் டார்க்கையும் அளிக்கும். 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டது.

மைலேஜ்
0 -100 கிமீ வேகத்தை 13.3 வினாடிகளில் எட்டிவிடும் திறன் கொண்ட இந்த கார் லிட்டருக்கு 20.63 கிமீ மைலேஜ் தரும் அராய் சான்று தெரிவிக்கிறது. ஆனால், நடைமுறையிலும் சிறப்பான மைலேஜை தரும் என்று நம்பலாம்.

வாரண்டி
நாடு முழுவதும் உள்ள 125 டீலர்கள் வழியாக புதிய டட்சன் கோ கார் விற்பனைக்கு கிடைக்கும். 2 ஆண்டுகள் வரையிலான வாரண்டி இந்த காருக்கு வழங்கப்படுகிறது.

வண்ணங்கள்
டட்சன் கோ கார் 4 விதமான வெளிப்புற வண்ணங்களிலும், 2 விதமான இன்டிரியர் வண்ணங்களிலும் கிடைக்கும்

விலை விபரம்
விலை விபரம்
பேஸ் வேரியண்ட்(D): ரூ.3,12,270
மிட் வேரியண்ட்(A): ரூ.3,46,482
டாப் வேரியண்ட்(T): ரூ.3,69,999
(அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை)

விலை ஒப்பீடு
டட்சன் கோ காரின் போட்டியாளர்களான மாருதி ஆல்ட்டோ கார் ரூ.2.72 லட்சம் முதல் ரூ.3.25 லட்சம் வரையிலான விலையிலும், ஹூண்டாய் இயான் கார் ரூ.2.83 லட்சம் முதல் ரூ.3.85 லட்சம் வரையிலான விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








