டட்சன் கோ... முதல் ஹேட்ச்பேக் காரை அறிமுகப்படுத்திய நிசான்

மாருதிக்கு டென்ஷனை கொடுக்கும் டிசைனுடன் டட்சன் பிராண்டின் முதல் ஹேட்ச்பேக் கார் டெல்லியில் நடந்த வண்ணமிகு விழாவில் சற்றுமுன் அறிமுகம் செய்யப்பட்டது. டட்சன் கோ(GO) என பெயரிடப்பட்டிருக்கும் இந்த கார் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

மாருதி ஆல்ட்டோ, ஹூண்டாய் இயான் கார்களுக்கு நேரடி போட்டியாளராக களமிறங்கும் இந்த கார் நிசானுக்கு பெரிய வர்த்தக வாய்ப்பை பெற்றுத் தரும் என நம்பப்படுகிறது. 2016ம் ஆண்டில் இந்திய மார்க்கெட்டில் 10 சதவீத பங்களிப்பை பெறுவதற்கு திட்டமிட்டுள்ள நிசானுக்கு இந்த கார் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாடலாக இருக்கிறது.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

அடுத்த ஆண்டு ஜனவரியில் ரூ.4 லட்சத்திற்குள் இந்த காரை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக நிசான் அறிவித்துள்ளது. ஆனால், ரூ.3.5 லட்சம் ஆன்ரோடு விலையில் பேஸ் வேரியண்ட்டை நிலைநிறுத்த நிசான் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எஞ்சின்

எஞ்சின்

மைக்ராவில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 5 ஸ்பீட் டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது.

வீல்பேஸ் அதிகம்

வீல்பேஸ் அதிகம்

மைக்ராவைவிட சிறிது கூடுதல் (2,450 மிமீ) வீல்பேஸ் கொண்டதாக இருப்பதால் இடவசதியும் அதிகமிருக்கும்.

கனவு நனவாகும்

கனவு நனவாகும்

இந்திய வாடிக்கையாளர்களின் கார் வாங்கும் கனவை டட்சன் கோ கார் நிறைவேற்றும்," என்று நிசான் தலைவர் கார்லோஸ் கோஸ்ன் கூறினார்.

 மீண்டும் டட்சன்

மீண்டும் டட்சன்

32 ஆண்டுகளுக்கு டட்சன் பிராண்டுக்கு மீண்டும் உயிர்கொடுத்துள்ளது நிசான். இன்பினிட்டி உள்பட நிசான் நிறுவனத்தின் மூன்றாவது பிராண்டு இது என்பது குறிப்பிடத்தக்கது.

 பிரிமியம் ஹேட்ச்பேக்

பிரிமியம் ஹேட்ச்பேக்

விலை குறைவான காராக குறிப்பிட்டாலும், பிரிமியம் ஹேட்ச்பேக் கார் போன்ற டிசைன், இடவசதியை கொண்டிருக்கிறது.

பிற மார்க்கெட்டுகள்

பிற மார்க்கெட்டுகள்

இந்தியா தவிர ரஷ்யா, இந்தோனேஷியா மற்றும் தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் டட்சன் பிராண்டு கார்கள் விற்பனைக்கு வர இருக்கிறது. அந்தந்த மார்க்கெட்டுகளுக்கு தகுந்தாற்போல் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும் என நிசான் தெரிவித்துள்ளது.

விலை

விலை

ரூ.2.99 லட்சம் முதல் ரூ.3.25 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய கார் விற்பனைக்கு வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்டிரியர்

இன்டிரியர்

டேஷ்போர்டிலேயே கியர் லிவர் பொருத்தப்பட்டிருக்கிறது. டோர் ஹேண்டில் உள்ளிட்ட சில பாகங்கள் மைக்ராவை ஒத்ததாக இருக்கிறது.

இருக்கை

இருக்கை

முன்வரிசையில் இருக்கைகள் தனித்தனியாக இல்லாமல் பழைய அம்பாசடர் கார் போன்று இணைக்கப்பட்டிருக்கிறது.

வடிவமைப்பு விபரம்

வடிவமைப்பு விபரம்

நீளம்: 3,785மிமீ

அகலம்: 1,635மிமீ

உயரம்: 1,485மிமீ

வீல்பேஸ்: 2,450மிமீ

டாக்கிங் ஸ்டேஷன்

டாக்கிங் ஸ்டேஷன்

ஸ்மார்ட்போனுக்கான டாக்கிங் ஸ்டேஷன் பொருத்தப்பட்டிருக்கும்.

டட்சன் கோ கார் படங்கள்
டட்சன் கோ கார் படங்கள்
டட்சன் கோ கார் படங்கள்
டட்சன் கோ கார் படங்கள்
டட்சன் கோ கார் படங்கள்
டட்சன் கோ கார் படங்கள்
டட்சன் கோ கார் படங்கள்

More from DriveSpark

Article Published On: Monday, July 15, 2013, 13:23 [IST]
English summary
Datsun has unveiled the first new Go hatchback car in Delhi today.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+