ஈக்கோஸ்போர்ட்டுக்கு ஒர்க் அவுட் செய்யப்பட்ட விலை பட்டியல்

ரூ.7.19 லட்சம் ஆரம்ப விலை முதல் ரெனோ டஸ்ட்டர் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், ஈக்கோஸ்போர்ட்டை ரூ.5.9 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்ய ஃபோர்டு திட்டமிட்டுள்ளது. அதாவது, பேஸ் வேரியண்ட் டஸ்ட்டர் ஆரம்ப விலையைவிட ஒரு லட்சம் வரை குறைவாக இருக்கும் என தெரிகிறது.
இதேபோன்று, டஸ்ட்டர் டாப் வேரியண்ட் ரூ.11 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஈக்கோஸ்போர்ட் டாப் வேரியண்ட்டை ரூ.9 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்க ஃபோர்டு முடிவு செய்துள்ளதாம்.
டஸ்ட்டர், குவான்ட்டோ உள்ளிட்ட எஸ்யூவி கார்கள் மட்டுமில்லாமல் சில முன்னணி ஹேட்ச்பேக் கார்கள் மற்றும் என்ட்ரி லெவல் செடான் கார் மார்க்கெட்டையும் உடைக்கும் விதத்தில் ஈக்கோஸ்போர்ட் விலை பட்டியலை தயாரித்து கையில் வைத்திருக்கிறதாம் ஃபோர்டு.


Click it and Unblock the Notifications








