ரூ.7.6 லட்சத்தில் ஃபியட் புன்ட்டோ ஸ்போர்ட் அறிமுகம்! - முழு விபரம்

ரூ.7.6 லட்சம் விலையில் 2013 மாடல் ஃபியட் புன்ட்டோ ஸ்போர்ட் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பெங்களூரிலுள்ள ஃபியட் கஃபேயில் நேற்று முன்தினம் மாலை நடந்த விழாவில் இந்த புதிய மாடல் விற்பனைக்காக அறிமுகம் செய்யப்பட்டது.

ஃபியட் இந்தியா தலைவர் நாகேஷ் பசவனஹள்ளி இந்த காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தார். இளைய சமுதாய வாடிக்கையாளர்களை கவரும் விதத்திலான அம்சங்களுடன் வந்துள்ளது. சாதாரண புன்ட்டோவைவிட இந்த காரில் இடம்பெற்றிருக்கும் கூடுதல் அம்சங்கள் குறித்த தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

2 வண்ணங்கள்

2 வண்ணங்கள்

வெள்ளை மற்றும் சிவப்பு ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. கூரையில் கருப்பு நிறத்திலான வண்ணம் தீட்டப்பட்டிருக்கிறது.

ஆக்சஸெரீஸ்

ஆக்சஸெரீஸ்

பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர், ரூஃப் ஸ்பாய்லர், ஸ்போர்ட் பேட்ஜ், பிராண்டடு டோர் சில்ஸ், தரை விரிப்புகள், சிவப்பு நிற நூலில் தையல் வேலைப்பாடு, அலுமினியத்திலான பெடல்கள், குரோம் பூச்சு கொண்ட எக்சாஸ்ட் குழாய் முனை ஆகியவை புன்ட்டோ ஸ்போர்ட்டின் கூடுதல் அம்சங்களாக இருக்கின்றன.

கண்ணாடி வண்ணம்

கண்ணாடி வண்ணம்

வெளிப்புற அழகை கூட்டுவதில் வேறு கலரிலான ரியர் வியூ கண்ணாடிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வெள்ளை நிற காரில் சிவப்பு ரியர் வியூ கண்ணாடிகளும், சிவப்பு நிற காரில் கருப்பு நிற ரியர் வியூ கண்ணாடிகளும் பொருத்தப்பட்டிருக்கின்றன.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

முன்பக்கத்தில் டூயல் ஏர்பேக்ஸ், எஞ்சின் மொபைலைசர், ஃபியட்டின் புளூ மீ தொழில்நுட்பம், கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, ஏபிஎஸ், ஸ்பீடு சென்சிங் வால்யூம் கன்ட்ரோல், ஆடியோ சிஸ்டம் ஆகியவை நிரந்தர அம்சங்களாக இடம்பெற்றிருக்கின்றன.

எஞ்சின்

எஞ்சின்

ஃபியட்டின் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக 93 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும். இந்த கார் லிட்டருக்கு 20.5 கிமீ மைலேஜ் தரும் என அராய் சான்று கூறுகிறது.

விலை

விலை

டெல்லியில் ரூ.7.60 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், பெங்களூரில் ரூ.7.74 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, August 16, 2013, 10:11 [IST]
English summary
Italian car maker Fiat has launched of its powerful version of Punto in Indian market at INR.7.60 lakhs (Ex Showroom Delhi).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+