சவாலான விலையில் வந்த லீனியா கிளாசிக் அறிமுகம்
4 மீட்டருக்கும் குறைவான செடான் கார் விலையில் ஓர் முழுமையான செடான் காரை வாங்க விரும்புபவர்களுக்கு சிறந்த சாய்ஸாக வந்துள்ளது ஃபியட் லீனியா கிளாசிக். ரூ.5.99 லட்சம் ஆரம்ப விலையில் பெட்ரோல், டீசல் மாடலில் வந்திருக்கும் லீனியா கிளாசிக்.
இதனால், மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், ஃபோர்டு கிளாசிக் உள்ளிட்ட கார்களுக்கு சிறந்த போட்டியாளராக மாறியுள்ளது ஃபியட் லீனியா கிளாசிக். லீனியாவின் கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

டிசைன்
டிசைனில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. பின்புறத்தில் கிளாசிக் வேரியண்ட் பேட்ஜ் பொருத்தப்பட்டிருக்கும்.

வேரியண்ட்டுகள்
பெட்ரோல், டீசல் மாடல்களில் கிடைக்கும். டீசல் மாடலில் கிளாசிக் தவிர கிளாசிக் ப்ளஸ் என்ற கூடுதல் அம்சங்கள் கொண்ட மாடலும் கிடைக்கும்.

எஞ்சின்
1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆகிய மாடல்களில் வந்துள்ளது. இதில், டீசல் மாடலில் 90 பிஎஸ் பவருக்கு பதிலாக 75 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் விதத்தில் இருக்கும். அதாவது, புன்ட்டோ டீசல் எஞ்சின் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வசதிகள் குறைப்பு
15 இஞ்ச் அலாய் வீல்கள், ஆடியோ சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்சுகள், கிளைமேட் கன்ட்ரோல், பின்புறம் பவர் விண்டோ வசதிகள் இதில் இருக்காது. 14 இஞ்ச் அலாய் வீல்கள், சாதாரண ஏசி கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், புன்ட்டோவில் இருப்பது போன்ற டேஷ்போர்டு மாற்றப்பட்டுள்ளது.

விலை விபரம்
பெட்ரோல் மாடல் ரூ.5.99 லட்சத்திலும், டீசல் மாடலின் கிளாசிக் மாடல் 6.95 லட்சத்திலும், கிளாசிக் ப்ளஸ் வேரியண்ட் ரூ.7.51 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

விலை வித்தியாசம்
தற்போது விற்பனையில் இருக்கும் லீனியா ரூ.7.12 லட்சம் முதலான ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட இருக்கும் நிலையில், ரூ.5.99,000 விலையில், அதாவது ஒரு லட்சம் வரையில் குறைவான விலையில் வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








