ரூ.6.25 லட்சத்தில் கூர்க்கா ஜீப்பை அறிமுகப்படுத்திய ஃபோர்ஸ்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூர்க்கா ஜீப் விற்பனையில் இருந்து வந்தது. ஆனால், விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லாததால் கடந்த 2011 துவக்கத்தில் கூர்க்கா விற்பனை நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், தற்போது எஸ்யூவிகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளதால் கூர்க்கா ஜீப்பை மீண்டும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது ஃபோர்ஸ் மோட்டார்ஸ்.
ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட கூர்கா ஜீப் ஆஃப்ரோடு வாகன பிரியர்களுக்கான சிறந்த அம்சங்களை கொண்டிருக்கிறது. 82 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.6 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
மூன்று வேரியண்ட்களில் ரூ.6.25 லட்சம், ரூ.8.35 லட்சம் மற்றும் ரூ.8.50 லட்சம் ஆகிய விலைகளில் புதிய கூர்க்கா ஜீப் கிடைக்கும். இந்த புதிய ஜீப்புக்காக ரூ.60 வரை கோடி வரை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் முதலீடு செய்துள்ளது.
இதனிடையே, அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் பென்ஸிடமிருந்து லைசென்ஸ் பெற்று தயாரிக்கப்படும் புதிய 9 சீட்டர் எம்பிவி காரை அறிமுகப்படுத்த இருப்பதாக ஃபோர்ஸ் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








