ஜூன் 11ல் விற்பனைக்கு வருகிறது ஈக்கோஸ்போர்ட்?

அடுத்த மாதம் 11ந் தேதி ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்ட தாமதத்தால் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மீது இருந்த எதிர்பார்ப்பு, ஆவல் எல்லாம் குறையத் துவங்கிவிட்டது. இதனால், சுதாரித்துக் கொண்ட ஃபோர்டு தற்போது ஈக்கோஸ்போர்ட்டை உடனடியாக களமிறக்கும் ஆயத்தப் பணிகளை மேற்கொண்டுள்ளது.

வரும் 1ந் தேதி ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு புக்கிங் துவங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், ஜூன் 11ந் தேதி முறைப்படி விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஃபோர்டு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல புதிய அம்சங்கள் பெட்ரோல், டீசல் எஞ்சின் மாடல்களில் விற்பனைக்கு வருவதால் வாடிக்கையாளர்களிடம் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

Ford Ecosport

அதிக மைலேஜ் மற்றும் சிறந்த டிசைன் கொண்டதாக வர இருக்கும் இந்த மினி எஸ்யூவி ரெனோ டஸ்ட்டருக்கு நேரடி போட்டியாக இருக்கும். ரூ.6 லட்சம் ஆரம்ப விலையில் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பிரிமியம் ஹேட்ச்பேக் மற்றும் என்ட்ரி லெவல் செடான் கார்களுக்கும் போட்டியை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, May 27, 2013, 11:48 [IST]
English summary
American automaker Ford is reportedly set to launch its much-anticipated EcoSport SUV in India on 11 June.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+