ரூ.5.59 லட்சம் என்ற சவாலான விலையில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் அறிமுகம்!
ரூ.5.59 லட்சம் என்ற மிக சவாலான ஆரம்ப விலையில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி டெல்லியில் நடந்த விழாவில் சற்றுமுன் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த விலை மூலம் பிரிமியம் ஹேட்ச்பேக் மற்றும் மினி எஸ்யூவி மார்க்கெட்டில் மிகப்பெரிய அதிர்வை ஃபோர்டு நிறுவனம் ஏற்படுத்தியிருக்கிறது. எஞ்சின், கியர் பாக்ஸ், விலை உள்ளிட்ட முக்கிய விபரங்கள் ஸ்லைடரில் கொடுக்கப்பட்டுள்ளது.

எஞ்சின்
125 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் டாப் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும். இதுதவிர, 112 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 91 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் டீசல் எஞ்சின் என மூன்று வித எஞ்சின் கொண்ட மாடல்களில் கிடைக்கும்.

டிரான்ஸ்மிஷன்
ஃபியஸ்ட்டா காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 6 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ்தான் இந்த ஈக்கோஸ்போர்ட்டிலும் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட மாடலிலும் கிடைக்கும்.

வண்ணங்கள்
7 வண்ணங்களில் புதிய ஈக்கோஸ்போர்ட் விற்பனைக்கு கிடைக்கும்.

ஆக்சஸெரீஸ்
ஈக்கோஸ்போர்ட்டுக்கு 38 ஆக்சஸெரீஸ்களையும் ஃபோர்டு அறிமுகம் செய்துள்ளது.

வேரியண்ட்கள்
வசதிகளை பொறுத்து ஆம்பியன்ட், டிரென்ட், டைட்டானியம் மற்றும் டைட்டானியம் ஆப்ஷனல் பேக் கொண்ட 4 வேரியண்ட்களில் கிடைக்கும்.

முன்பதிவு
ரூ.50,000 முன்பணத்துடன் ஈக்கோஸ்போர்ட்டுக்கு முன்பதிவு ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டது.

டெலிவிரியும் துவக்கம்
இன்றுமுதல் டெலிவிரியும் துவங்கப்படுவதாக ஃபோர்டு தெரிவித்துள்ளது.

விலை விபரம்
1.5 லிட்டர் பெட்ரோல் மாடல்
ஆம்பியன்ட் ரூ.5.59 லட்சம்
டிரென்ட் ரூ.6.49 லட்சம்
டைட்டானியம் ரூ.7.51 லட்சம்
டைட்டானியம் ஆட்டோமேட்டிக் ரூ.8.45 லட்சம்

விலை விபரம்
1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் மாடல்
டைட்டானியம் ரூ.7.9 லட்சம்
டைட்டானியம் ஆப்ஷனல் பேக் ரூ.8.29 லட்சம்

விலை விபரம்
1.5 லிட்டர் டீசல் மாடல்
ஆம்பியன்ட் ரூ.6.69 லட்சம்
டிரென்ட் ரூ.7.61 லட்சம்
டைட்டானியம் ரூ.8.62 லட்சம்
டைட்டானியம் ஆப்ஷன் பேக் ரூ.8.99 லட்சம்
(அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை)


Click it and Unblock the Notifications








