அடுத்த மாதம் ஈக்கோஸ்போர்ட் ரிலீஸ்: ஜூன் 1-ல் புக்கிங் துவக்கம்!
அடுத்த மாதம் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி அறிமுகம் செய்ய இருப்பது உறுதியாகியுள்ளது. வரும் 1ம் தேதியிலிருந்து ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கவும் ஃபோர்டு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்திய மார்க்கெட்டுக்கு இந்த ஆண்டின் மிகப்பெரிய அறிமுகமாக ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி இருக்கும். இந்த எஸ்யூவி 1.5 லிட்டர் எஞ்சின் மற்றும் 1.0 லிட்டர் எஞ்சின் என்ற இரண்டுவிதமான பெட்ரோல் மாடல்களிலும், 1.5 லிட்டர் எஞ்சின் கொண்ட டீசல் மாடலிலும் விற்பனைக்கு வருகிறது.

இதுதவரி, அவசர கால உதவி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல புதிய வசதிகளுடன் ஈக்கோஸ்போர்ட் வர இருக்கிறது. ரூ.6 லட்சம் ஆரம்ப விலையில் பேஸ் மாடல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாப் வேரியண்ட் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சினுடன் மட்டுமே கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








