ஃபோர்டு எண்டெவர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு வந்தது!
சிறிய மாற்றங்கள் மற்றும் கூடுதல் அம்சங்கள் கொண்ட ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், மிக கவர்ச்சிகரமான விலையில் இந்த புதிய பிரிமியம் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முகப்பில் மாற்றங்களுடன் வந்திருக்கும் இந்த புதிய மாடல் வாடிக்கையாளர்களை கவரும் என்று ஃபோர்டு தெரிவிக்கிறது. இந்த புதிய எஸ்யூவியின் சிறப்பம்சங்கள் மற்றும் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

முகப்பு மாற்றம்
ஹெட்லைட் மற்றும் புதிய கிரில் ஆகியவை எண்டெவர் தோற்றத்தை புதுப்பொலிவுடன் காட்டுகிறது. இதன்மூலம், ஃபோர்டு எண்டெவரின் முகம் நவீனத்துவம் கொண்டதாக மாறியிருக்கிறது.

ஆஃப் ரோடர்
ஃபோர்டு எண்டெவர் எப்போதுமே ஆஃப் ரோடு பிரியர்களுக்கு ஏற்ற மாடலாக கருதப்படுகிறது. வலுவான கட்டமைப்பு கொண்ட இந்த எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும்.

பேஸ் வேரியண்ட்
பேஸ் வேரியண்ட்டில் 2.5 லிட்டர் டியூராடார்க் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது 2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. இது ரூ.19,83,898 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

மிட் வேரியண்ட்
இந்த வேரியண்ட்டில் 3.0 லிட்டர் டியூராடார்க் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட இந்த மாடலில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக இருக்கும். ரூ.21,28,119 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.

டாப் வேரியண்ட்
இந்த வேரியண்ட்டில் 3.0 லிட்டர் டியூராடார்க் எஞ்சின் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டது. இது 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக இருக்கிறது. இது ரூ.23,06,302 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

வசதிகள்
லெதர் இருக்கைகள், சாட்நவ் நேவிகேஷன், புளூடூத் ஆடியோ கன்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா போன்ற வசதிகளுடன் வந்துள்ளது. முந்தைய மாடலைவிட கூடுதல் சொகுசு மற்றும் தோற்றப் பொலிவுடன் 2014 ஃபோர்டு எண்டெவர் மாடல் விற்பனைக்கு வந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications








