ரூ.6 லட்சத்துக்குள் ஈக்கோஸ்போர்ட்டை களமிறக்க ஃபோர்டு திட்டம்?

ஃபோர்டு விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கும் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. தற்போது இறுதிகட்ட சோதனைகள் முடிந்து சில டீலர்களுக்கு ஈக்கோஸ்போர்ட் அனுப்பப்பட்டுள்ளது.
எனவே, விரைவில் ஈக்கோஸ்போர்ட் மார்க்கெட்டில் களமிறங்குவது உறுதியாகி இருக்கிறது. ரூ.7 லட்சம் முதல் ரூ.9 லட்சத்துக்கு இடையிலான விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்த நிலையில், ஆட்டோகார் இந்தியா இதழின் ஆசிரியர் ஹார்மஸ்த் சொரப்ஜி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை ரூ.6 லட்சம் ஆரம்ப விலையில் ஃபோர்டு அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
அப்படி அறிமுகமாகும் பட்சத்தில் விற்பனையில் சக்கை போடு போட்டு வரும் ரெனோ டஸ்ட்டருக்கு பெரும் நெருக்கடி ஏற்படும்.


Click it and Unblock the Notifications








