ஜூனில்தான் வருகிறதாம் ஈக்கோஸ்போர்ட்!

ஈக்கோஸ்போர்ட்டை வருகையை எதிர்பார்த்து வழி மீது விழி வைத்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மற்றுமொரு கசப்பான செய்தி.
இதோ, அதோ என்று ஈக்கோஸ்போர்ட் அறிமுகம் குறித்து வெளியாகும் தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் புதிய செய்தி கசிந்துள்ளது.
வரும் ஜூனில் புதிய ஈக்கோஸ்போர்ட் மினி எஸ்யூவியை அறிமுகப்படுத்த ஃபோர்டு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை ஃபோர்டு பார்வைக்கு வைத்திருந்தது.
ஈக்கோஸ்போர்ட்டை பிரலப்படுத்தும் பணிகளை ஃபோர்டு முழு வீச்சில் துவங்கியிருப்பதால் விரைவில் விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த செய்தி வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








