வணிக வளாகங்களில் தரிசனம் தரப்போகும் ஈக்கோஸ்போர்ட்!

By Saravana
Ford Ecosport
ஈக்கோஸ்போர்ட்டை ஊடகங்கள் வழியாக கொண்டு செல்வதற்கு முன்பாகவே பொதுமக்கள் பார்வைக்கு விட ஃபோர்டு முடிவு செய்துள்ளது.

வழக்கமாக கார்களை அறிமுகம் செய்யும்போது பிரத்யேக விழாக்களை நடத்தி அதில் பத்திரிக்கையாளர்களை வரவழைத்து விபரங்களை வெளியிடுவது கார் தயாரிப்பாளர்களின் வழக்கம்.

ஆனால், இந்த முறையை கொஞ்சம் மாற்றி முதலில் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு ஈக்கோஸ்போர்ட்டை விட ஃபோர்டு முடிவு செய்துள்ளது. அதாவது, மாநகரங்களில் இருக்கும் பெரிய வணிக வளாகங்களில் ஈக்கோஸ்போர்ட்டை பார்வைக்கு வைக்க உள்ளது ஃபோர்டு.

நாளை மறுதினம் முதல் 17ந் தேதி வரை மும்பை, மலாடில் உள்ள இன்ஃபினிட்டி மாலில் ஈக்கோஸ்போர்ட் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. இதேபோன்று, பெங்களூர் மல்லேஸ்வரத்திலுள்ள மந்த்ரி மாலிலும் 28ந் தேதி முதல் 30ந் தேதி வரை ஈக்கோஸ்போர்ட் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

மேலும், தகுதியுடைய வாடிக்கையாளர்கள் ஈக்கோஸ்போர்ட்டை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் வாய்ப்பையும் ஃபோர்டு வழங்க உள்ளது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட் மாடலை பார்வைக்கு வைத்திருந்த ஃபோர்டு அதற்கு முன்னதாக இதேபோன்று, நாடு முழுவதும் உள்ள சில வணிக வளாகங்களில் ஈக்கோஸ்போர்ட்டை பார்வைக்கு வைத்திருந்தது நினைவிருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 13, 2013, 13:58 [IST]
English summary
Ford has decided to unveil the Ecosport mini SUV officially across shopping malls in India, starting 15th March 2013.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+