அடுத்த மாதம் ஈக்கோஸ்போர்ட்டுக்கு முன்பதிவு துவங்க ஃபோர்டு முடிவு?
அடுத்த மாதம் முதல் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வராமல் ஃபோர்டு இழுத்தடித்து வருகிறது. இதனால், அந்த எஸ்யூவி மீதான ஆர்வம் குறைய துவங்கியிருக்கிறது.
இது ஒரு வகையில் டஸ்ட்டருக்கு பெரும் வாய்ப்பாகவும் அமைந்துவிட்டது. டஸ்ட்டரின் விற்பனை எந்த தொய்வும் இல்லாமல் சக்கை போடு போட்டு வருகிறது. இந்த நிலையில், அடுத்த மாதம் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், ஈக்கோஸ்போர்ட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறிது மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பற்றி வெளியான முக்கிய விபரங்கள்



Click it and Unblock the Notifications








