ரூ.5.59 லட்சத்தில் சென்னையில் செவர்லே என்ஜாய் அறிமுகம்

கடந்த வாரம் செவர்லே என்ஜாய் என்ற புத்தம் புதிய எம்பிவி காரை தேசிய அளவில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்தது. 8 இருக்கைகள் மற்றும் 7 இருக்கைகள் கொண்ட இரு மாடல்களில் இந்த கார் விற்பனைக்கு வந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் என்ஜாய் எம்பிவி காரை அறிமுகம் செய்யும் விழா நேற்று மதியம் சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் நடந்தது. செவர்லேயின் தயாரிப்பு திட்டமிடல் பிரிவு துணைத் தலைவர் சாஸ்திரி வெம்பட்டி என்ஜாய் எம்பிவி காரை அறிமுகம் செய்தார். பின்னர் விழாவில் அவர் பேசியதாவது,
"என்ஜாய் காருக்கான பெரும்பான்மையான உதிரிபாகங்கள் இந்தியாவிலேயே பெறப்படுகிறது. இது உள்நாட்டு பொருளாதாரத்துக்கு ஊக்கம் தருவதோடு மட்டுமின்றி, குறைந்த முதலீட்டில் என்ஜாய் காரை உரிமையாக்கிக் கொள்ளும் வாய்ப்பை வாடிக்கையாளர்களும் பெற முடியும்.
மேலும், எம்பிவி கார் சந்தை மிக வேகமாக வளர்ந்து வருவதால், இதில் என்ஜாய் வெகு சீக்கிரத்தில் பிரபலமடையும் என்று நம்புகிறோம். என்ஜாய் மூலம் செவர்லே பிராண்டு மீதான நம்பிக்கை இன்னும் வலுப்படும்," என்று கூறினார்.
செவர்லே என்ஜாய் எம்பிவி கார் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் விற்பனைக்கு வந்துள்ளது. பெட்ரோல் மாடலில் 104 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், டீசல் மாடலில் 77.5 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் ஸ்மார்ட்டெக் டீசல் எஞ்சினும் பொருத்தப்பட்டு இருக்கிறது. சென்னையில் விற்பனைக்கு வந்துள்ள என்ஜாய் எம்பிவி காரின் எக்ஸ்ஷோரூம் விலை விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை விலை விபரம்:
பெட்ரோல் வேரியண்ட்கள்
எல்எஸ்(8 சீட்டர்) : ரூ5.59 லட்சம்
எல்எஸ்(7 சீட்டர்) : ரூ5.64 லட்சம்
எல்டி(7 சீட்டர்) : ரூ.6.43 லட்சம்
எல்டிஇசட்(7 சீட்டர்): ரூ.7.12 லட்சம்
டீசல் வேரியண்ட்கள்
எல்எஸ்(8 சீட்டர்) : ரூ6.81 லட்சம்
எல்எஸ்(7 சீட்டர்) : ரூ.6.88 லட்சம்
எல்டி(7 சீட்டர்) : ரூ.7.56 லட்சம்
எல்டிஇசட்(7 சீட்டர்): ரூ.8.14 லட்சம்


Click it and Unblock the Notifications








