ஜூன் முதல் செவர்லே கார்கள் விலை உயருகிறது!
செவர்லே கார்களின் விலை ரூ.10,000 வரை அதிகரிக்கப்பட உள்ளது. ஜூன் முதல் வாரத்தில் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது.
உற்பத்தி செலவீனம் மற்றும் இதர காரணங்களுக்காக அவ்வப்போது கார் விலையை தயாரிப்பாளர்கள் உயர்த்தி வருகின்றன. இந்த நிலையில், டீசல் விலை உயர்வால், போக்குவரத்து செலவீனம் அதிகரித்துள்ளதால் கார்களின் விலையை ரூ.10,000 வரை அதிகரிக்க இருப்பதாக செவர்லே பிராண்டில் கார் விற்பனை செய்து வரும் ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜெனரல் மோட்டார்ஸ் துணைத் தலைவர் பி.பாலேந்திரன் குறிப்பிடுகையில்,"டீசல் விலை மாதாமாதம் உயர்த்தப்பட்டு வருவதன் எதிரொலியால் போக்குவரத்து செலவீனம் மிக கடுமையாக அதிகரித்து வருகிறது.
இதனை சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இதனை வாடிக்கையாளர் தலையில் சுமத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வரும் ஜூன் முதல் கார் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








