ரூ.4.97 லட்சத்தில் பிஎஸ் 4 டீசல் அம்பாசடர் அறிமுகம்!
ரூ.4.97 லட்சத்தில் பாரத் ஸ்டேஜ்- 4 மாசுக்கட்டுப்பாட்டு அம்சம் கொண்ட டீசல் அம்பாசடர் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
என்கோர் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய அம்பாசடர் கோல்கட்டா டாக்ஸி மார்க்கெட்டில் பெரும் வரவேற்பை பெறும் என்று கருதப்படுகிறது. மேலும், பழைய அம்பாசடரை எக்ஸ்சேஞ்ச் செய்பவர்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படும் என்று ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

புதிய பிஎஸ்4 டீசல் அம்பாசடரில் 1500சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. அதிக பவர், டார்க்கை வழங்கும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, கையாளுமையும் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், அதிக எரிபொருள் சிக்கனத்தையும் வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகரங்களில் பிஎஸ் 3 அம்பாசடர் கார்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், விற்பனை பெரும் பாதிப்பை சந்தித்தது. இந்த நிலையில், புதிய அம்பாசடர் நிச்சயம் புதிய திருப்புமுனையை அளிக்கும் என்று ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நம்புகிறது.


Click it and Unblock the Notifications








