அடுத்த ஆண்டு புத்தம் புதிய அம்பாசடர் ஹேட்ச்பேக் கார்!
அடுத்த ஆண்டு அம்பாசடர் ஹேட்ச்பேக் காரை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் அறிமுகப்படுத்துகிறது. பாரம்பரிம் மிக்க அம்பாசடர் கார் பிராண்டு மார்க்கெட்டிலிருந்து அத்து போய் விட்டது. பாரத் ஸ்டேஜ் 3 அம்சம் கொண்ட எஞ்சின், பழமையான டிசைன் ஆகியவை அம்பாசடரை ஓரம் கட்டிய விஷயங்கள்.
இந்த நிலையில், அம்பாசடர் பிராண்டை உயிர்ப்பிக்கும் முயற்சிகளை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் தற்போது மேற்கொண்டுள்ளது. கொஞ்சம் தாமதம்தான் என்றாலும், அம்பாசடர் பிராண்டுக்கு இருக்கும் மகிமையை வைத்து மீண்டும் மார்க்கெட்டை பிடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் தற்போது பிர்லா குழுமத்தின் அங்கமான ஹிந்துஸ்தான் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

டிசைன்
பழைய அம்பாசடர் பிளாட்பார்மிலேயே புதிய ஹேட்ச்பேக் கார் வடிவமைக்கப்படுகிறது.

வரிச்சலுகை
வரிச்சலுகை பெறும் விதத்தில் 4 மீட்டருக்கும் குறைவான நீளத்துடன் புதிய கார் டிசைன் செய்யப்படுகிறது.

தோற்றம்
புதிய தலைமுறை கார்களுடன் போட்டி போடும் வகையில் வெளிப்புறம் மற்றும் முற்றிலும் புதிய இன்டிரியருடன் புதிய அம்பி உருவாகி வருகிறான்.

அறிமுகம் எப்போது
அடுத்த ஆண்டு இறுதியில் இந்த புதிய காரை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எஞ்சின்
பாரஸ் ஸ்டேஜ்-4 மாசுக்கட்டுப்பாட்டு அம்சம் கொண்ட எஞ்சினுடன் புதிய அம்பாசடர் வர இருக்கிறது.

அதிகாரியின் பேட்டி
அம்பி பிராண்டை தூக்கி நிறுத்தும் முயற்சியை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான உத்தம் போஸ் கையிலெடுத்துள்ளார். வர்த்தக இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர் கூறியதாவது, "அம்பாசடர் பிராண்டில் புதிய ஹேட்ச்பேக் காரை அறிமுகப்படுத்த உள்ளோம். புதிய ஹேட்ச்பேக் கார் பழைய அம்பாசடர் பிளாட்பார்மிலேயே வடிவமைக்கும் பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் புதிய தலைமுறை டிசைன் மற்றும் வசதிகள் கொண்டதாக இருக்கும்.

இப்போதைய மாடலும் தொடரும்
பழைய அம்பாசடர் காரும் தொடர்ந்து விற்பனையில் இருக்கும். இந்த காரில் பாரத் ஸ்டேஜ்-4 மாசுக்கட்டுப்பாட்டு அம்சம் கொண்ட எஞ்சினுடன் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளோம். இதன்மூலம், விற்பனை மீண்டும் ஏற்றம் பெற வாய்ப்பு ஏற்படும்," என்றார்.

வரவேற்பு
பழைய கார்களுக்கு பதிலாக பாரத் ஸ்டேஜ்3 அம்பாசடர்களை டாக்சி உரிமையாளர்கள் வாங்கிக் கொள்ள மேற்கு வங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால், கடந்த இரு மாதங்களாக அம்பாசடர் விற்பனை அதிகரித்துள்ளது. இதனைத் தக்கவைத்துக் கொள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் பல்வேறு வித முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

முந்தைய திட்டம்
கடந்த 2010ம் ஆண்டு அம்பாசடர் ஹேட்ச்பேக் காரை வடிவமைக்கும் பணிகளை புனேயை சேர்ந்த ஓனியோ என்ற டிசைன் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆனால், முதலீடுகள் பற்றாக்குறையால் அப்போது அத்திட்டம் கைவிடப்பட்டது.

உற்பத்தி
மேற்குவங்க மாநிலம், உத்தர்பாராவில் உள்ள ஆலையில் புதிய கார் தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக, அந்த ஆலையை தரம் உயர்த்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.
Images courtesy: subhodeepghosh


Click it and Unblock the Notifications








