கலரை பொறுத்து 6 மாதங்கள் வரை நீளும் அமேஸ் வெயிட்டிங் பீரியட்
மாருதி டிசையர் விற்பனைக்கு வந்தபோது இப்படியொரு நிலைதான் இருந்தது. அதேபோன்ற ஒரு நிலை தற்போது ஹோண்டா அமேஸ் காருக்கும் ஏற்பட்டுள்ளது. தேர்வு செய்யும் கலரை பொறுத்து டீசல் அமேஸ் காரின் காத்திருப்பு காலம் 6 மாதங்கள் வரை நீள்கின்றது.
ஸ்விப்ட் காருக்கு நேரடி போட்டியாளராக உருவெடுத்திருக்கும் ஹோண்டா அமேஸ் செடான் வாடிக்கையாளர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. இந்த நிலையில், டீசல் அமேஸ் காருக்கான காத்திருப்பு காலம் 4 மாதங்கள் வரை இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.

தற்போது நீங்கள் தேர்வு செய்யும் கலரை பொறுத்தும் டீசல் அமேஸ் காருக்கான காத்திருப்பு காலம் 6 மாதங்கள் வரை நீளும் நிலை இருக்கிறது. சில்வர் கலர் காருக்கு அதிக அளவில் முன்பதிவு செய்யப்படுகிறது. இதனால், சில்வர் நிற அமேஸ் காரை முன்பதிவு செய்தால் அமேஸை சொந்தமாக்க 6 மாதங்கள் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதவிர, நீங்கள் வசிக்கும் நகரத்தை பொறுத்தும் காத்திருப்பு காலம் மாறுபடும். கருப்பு கலர் காரை முன்பதிவு செய்தால் நிச்சயமாக 2 மாதங்களில் அமேஸ் கைக்கு கிடைத்துவிடும்.
ஹோண்டா அமேஸ் தற்போது டஃபேட்டா ஒயிட், அலபாஸ்டர் சில்வர் மெட்டாலிக், கார்னேலியன் ரெட் பியர்ல், அர்பன் டைட்டானியம் மெட்டாலிக், கிறிஸ்டல் பிளாக் பியர்ல் ஆகிய 6 வண்ணங்களில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








