டீசல் அமேஸ் காருக்கு அமோக வரவேற்பு: காத்திருப்பு காலமும் நீள்கிறது

டீசல் அமேஸ் காருக்கான காத்திருப்பு காலம் 3 மாதங்கள் வரை நீண்டுள்ளது. மேலும், முன்பதிவு எண்ணிக்கையும் 8,000ஐ நெருங்குவதாக ஹோண்டா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் விற்பனைக்கு வந்த ஹோண்டா அமேஸ் செடான் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அறிமுகம் செய்யப்பட்டு சில நாட்களிலேயே 6,500க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்தனர். குறிப்பாக, டீசல் காருக்கு வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆதரவு கிடைத்துள்ளது.

Honda Amaze

இந்த நிலையில், டீசல் அமேஸ் காருக்கான காத்திருப்பு காலம் வெகுவாக அதிகரித்து வருகிறது. தற்போது டீசல் அமேஸ் காரை முன்பதிவு செய்து டெலிவிரி பெறுவதற்கு 3 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதவிர, அமேஸ் காருக்கான விற்பனை இலக்கையும் ஹோண்டா வெளியிட்டுள்ளது. அதில், நடப்பு நிதி ஆண்டில் 50,000 கார்களை விற்பனை செய்ய இலக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மாதத்திற்கு சராசரியாக 5,000 அமேஸ் கார்களை விற்பனை செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையை அமேஸ் நிச்சயம் எட்டும் என்றும் அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 20, 2013, 12:28 [IST]
English summary
Japanese carmaker Honda is set to take back its shining position in Indian market. And recently launched Amaze sedan is indeed proving all these endeavours.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+