சென்னையில் ஹோண்டா அமேஸ் அறிமுகம் - விபரங்கள்
சென்னையில் ஹோண்டா அமேஸ் நேற்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ரூ.5.04 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை முதல் அமேஸ் கிடைக்கும். இதுதவிர, தமிழகம் முழுவதும் உள்ள ஹோண்டா ஷோரூம்களிலும் அமேஸ் கிடைக்கும்.
சென்னையில் நடந்த விழாவில் ஹோண்டா கார் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் ஞானேஸ்வர் சென் அமேஸ் காரை அறிமுகம் செய்தார். ஸ்லைடரில் கூடுதல் விபரங்கள், சென்னை விலை விபரங்களை காணலாம்.

சிறந்த கார்
ஞானேஸ்வர் சென் கூறுகையில்," எரிபொருள் சிக்கனம், பெர்ஃபார்மென்ஸ், தொழில்நுட்பம், தரம் என எல்லா விதத்திலும் அமேஸ் சிறந்த குடும்ப காராக இருக்கும். டீசல் கார் செக்மென்ட்டில் இறங்கியிருப்பதன் மூலம் புதிய வாடிக்கையாளர் அடித்தளத்தை பெற முடியும் என நம்புகிறோம். வாடிக்கையாளர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் அமேஸ் கச்சிதமாக நிறைவு செய்யும்.

சிறப்பு பராமரிப்பு திட்டம்
அமேஸ் காருக்கு 2 ஆண்டுகள் அல்லது 40,000 கிமீ.,க்கான வாரண்டி வழங்கப்படுகிறது. "ஹோண்டா கேர் மெயின்டெனன்ஸ் பேக்கேஜ்" என்ற பெயரில் வழங்கப்படும் இந்த சிறப்பு பராமரிப்பு திட்டத்துக்காக பெட்ரோல் காருக்கு 9,996 ரூபாயும், டீசல் மாடலுக்கு 15,375 ரூபாயும் கூடுதலாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வண்ணங்கள்
மெஜஸ்டிக் புளூ மெட்டாலிக், கார்னேலியன் ரெட் பியர்ல், அர்பன் டைட்டானியம் மெட்டாலிக், அலபாஸ்டர் சில்வர் மெட்டாலிக், கிறிஸ்டல் பிளாக் பியர்ல், டஃபேட்டா ஒயிட் ஆகிய 6 வண்ணங்களில் கிடைக்கும்.

ஆட்டோமேட்டிக் மாடல்
ஹோண்டா அமேஸ் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடலிலும் கிடைக்கும். பெட்ரோல் மாடலில் இரு வேரியண்ட்களில் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

சென்னை எக்ஸ்ஷோரூம் விலை விபரம்
பெட்ரோல் மாடல் விலை விபரம்
1.2 E MT (i-VTEC) Petrol: Rs.5,04,300
1.2 S MT (i-VTEC) Petrol: Rs.5,67,800
1.2 EX MT (i-VTEC) Petrol: Rs.5,29,800
1.2 VX MT (i-VTEC) Petrol: Rs.6,64,800

1.2 S AT (i-VTEC) Petrol: Rs.6,67,300 1.2 VX AT (i-VTEC) Petrol: Rs.7,57,000
ஆட்டோமேட்டிக் விலை விபரம்
(பெட்ரோலில் மட்டும் கிடைக்கும்)
1.2 S AT (i-VTEC) Petrol: Rs.6,67,300
1.2 VX AT (i-VTEC) Petrol: Rs.7,57,000

சென்னை எக்ஸ்ஷோரூம் விலை விபரம்
டீசல் மாடல் விலை விபரம்
1.5 E MT (i-DTEC) Diesel: Rs.6,15,400
1.5 EX MT (i-DTEC) Diesel: Rs.6,39,980
1.5 S MT (i-DTEC) Diesel: Rs.6,74,000
1.5 VX MT (i-DTEC) Diesel: Rs.7,68,700


Click it and Unblock the Notifications








