கூடுதல் வசதிகளுடன் பிரியோவை களமிறக்கிய ஹோண்டா

மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல்களில் இந்த புதிய வேரியண்ட் கிடைக்கும். விஎக்ஸ் வேரியண்ட்டில் டிரைவர் சீட் அட்ஜெஸ்ட்மென்ட் மற்றும் ரியர் டிஃபாகர் கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கிறது.
பிரியோவின் இந்த புதிய வேரியண்ட் அறிமுக விழாவில் பேசிய ஹோண்டாவின் மூத்த துணைத் தலைவர் ஞானேஸ்வர் சென் கூறுகையில்," எங்களது விற்பனையில் பிரியோ மிக முக்கிய பங்களிப்பை கொடுத்து வருகிறது. கடந்த நிதி ஆண்டில் 32,000 பிரியோ கார்களை விற்பனை செய்துள்ளோம்.
எனவே, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் கூடுதல் வசதிகளுடன் விஎக்ஸ் வேரியண்ட்டை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். இதன்மூலம், பிரியோவின் மதிப்பு மேலும் கூடியிருக்கிறது," என்றார்.
பிரியோவின் பெட்ரோல் மாடலில் 88பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் ஐவிடெக் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. பிரியோவின் புதிய பெட்ரோல் விஎக்ஸ் வேரியண்ட்டின் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை விபரம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
விஎக்ஸ் (மேனுவல்): ரூ.5,34,500
விஎக்ஸ் (ஆட்டோமேட்டிக்): ரூ.6,12,500


Click it and Unblock the Notifications








