அடுத்த மாதம் முதல் ஜாஸ் உற்பத்தியை நிறுத்தும் ஹோண்டா!

இந்தியாவில் தனது வர்த்தக கொள்கைகளை அடியோடு மாற்றுவதற்கு ஹோண்டா கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும், போட்டியாளர்களால் நெருக்கடிக்கு உள்ளாகி இழந்த இடத்தை மீண்டும் பிடிக்கும் முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
இதற்காக, முதல் டீசல் காரை ஏப்ரலில் அறிமுகம் செய்ய உள்ளது. மேலும், ஜாஸ் பிரிமியம் ஹேட்ச்பேக் காரின் உற்பத்தியையும் தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளது. சிறந்த பிரிமியம் ஹேட்ச்பேக் கார்தான் என்றாலும், விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லாததால் இந்த முடிவை ஹோண்டா எடுத்துள்ளது.
கடந்த 2009ல் அறிமுகம் செய்யப்பட்ட ஜாஸ் இதுவரை விற்பனையில் சாதிக்கவில்லை. எனவே, புதிய அம்சங்களுடன் கூடிய அடுத்த தலைமுறை ஜாஸ் காரை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்ய உள்ளது.
இதற்காக, தற்போது விற்பனையில் இருக்கும் ஜாஸ் கார் உற்பத்தியை வரும் மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட இருப்பதாக ஹோண்டா தெரிவித்துள்ளது. பிரியோ, அமேஸ் உள்ளிட்ட கார்களை வைத்து இந்த ஆண்டு விற்பனையை நிச்சயம் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையில் ஹோண்டா இந்த முடிவை எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications








