மேம்படுத்தப்பட்ட புதிய சிஆர்வி எஸ்யூவி: ஹோண்டா அறிமுகம்
ரூ.19.95 லட்சம் விலையில் புதிய சிஆர்வி பிரிமியம் எஸ்யூவியை சற்றுமுன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது ஹோண்டா கார் நிறுவனம்.
2.0 லிட்டர் மற்றும் 2.2 லிட்டர் ஆகிய இரண்டு பெட்ரோல் எஞ்சின் மாடல்களில் 4 வேரியண்ட்களில் புதிய சிஆர்வி கிடைக்கும்.

2.4 லிட்டர் எஞ்சின் பெட்ரோல் மாடல் 4 வீல் டிரைவ் சிஸ்டத்தையும், 2.0 லிட்டர் எஞ்சின் கொண்ட பெட்ரோல் மாடல் 2 வீல் டிரைவ் சிஸ்டத்தையும் கொண்டிருக்கும். ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடல்களில் கிடைக்கும். மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடலில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
இதுதவிர, எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங், 6 ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம், 6.1 இஞ்ச் டச் ஸ்கிரீன் ஆகியவை ஸ்டான்டர்டு அம்சங்கள். ஏபிஎஸ், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டூயல் எஸ்ஆர்எஸ் ஏர்பேக்ஸ் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டிருக்கும். செவர்லே கேப்டிவா, மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவிகளுக்கு நேரடி போட்டியை கொடுக்கும்.
டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை விபரம்
2.0 லிட்டர் எம்டி ரூ.19.95 லட்சம்
2.0 லிட்டர் ஏடி ரூ.20.85 லட்சம்
2.4 லிட்டர் ஏடி ரூ.22.40 லட்சம்
2.0 லிட்டர் ஏடி+ஏவிஎன் ரூ.23.85 லட்சம்
(ஏவிஎன்-ஆடியோ, வீடியோ, நேவிகேஷன்)


Click it and Unblock the Notifications








