ஹோண்டாவின் முதல் டீசல் கார் அமேஸ் அறிமுகம்
ரூ.4.99 லட்சம் ஆரம்ப விலையில் ஹோண்டா அமேஸ் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த விழாவில் சற்றுமுன் இந்த புதிய கார் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய கார் மூலம் மிகப்பெரிய வாடிக்கையாளர் அடித்தளத்தை பெற முடியும் என ஹோண்டா சிஇஓ ஹிரனோரி கனயாமா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஹோண்டாவின் முதல் டீசல் கார் என்பதால் வாடிக்கையாளர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஹோண்டா மற்றும் வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புகளை அமேஸ் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கலாம்.
மேலும், டிசையருக்கு நேர் எதிரியாக களமிறங்கியிருக்கும் அமேஸ் காரை 6 பெட்ரோல் வேரியண்ட்களிலும், 4 டீசல் வேரியண்ட்களிலும் ஹோண்டா களமிறக்கியுள்ளது. இது போட்டியாளர்களுக்கு சவாலாகவும், வாடிக்கையாளர்களுக்கு சாதகமாகவும் இஷ்டம்போல் தேர்ந்தெடுக்கும் வகையிலும் இருக்கும். இதில், பெட்ரோல் வேரியண்ட்டில் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடலும் அடக்கம். அமேஸ் காரின் சிறப்பம்சங்கள் மற்றும் முழுமையான விலை விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

எஞ்சின்
பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 100 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் ஐ-டிடெக் டீசல் எஞ்சினுடன் வந்திருக்கிறது.

மைலேஜ்
பெட்ரோல் கார் நகர்ப்புறத்தில் லிட்டருக்கு 15.5 கிமீ மைலேஜையும், நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 18 கிமீ மைலேஜையும் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டீசல் மாடல் லிட்டருக்கு 25.8 கிமீ மைலேஜ் தரும் என ஹோண்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தியாவின் அதிக மைலேஜ் கொடுக்கும் டீசல் காராக கருதப்படுகிறது.

ஸ்பெஷல் வைன்ட் ஸ்கிரீன்
வெப்பத்தை உறிஞ்சி உள்ளே விடாமல் தடுக்கும் தன்மை கொண்ட சிறப்பான வைன்ட் ஸ்கிரீன் பொருத்தப்பட்டு இருக்கிறது.

வேரியண்ட் விபரம்
பெட்ரோல் மாடல் 6 வேரியண்ட்களிலும், டீசல் மாடல் 4 வேரியண்ட்களிலும் கிடைக்கும்.

பெட்ரோல் மாடல் விலை
இ-கிரேடு: ரூ.4.99 லட்சம்
இஎக்ஸ்-கிரேடு: ரூ.5.24 லட்சம்
எஸ் கிரேடு: ரூ.5.62 லட்சம்
விஎஸ் கிரேடு: ரூ.6.60 லட்சம்
ஆட்டோமேட்டிக் பேஸ் வேரியண்ட்: ரூ.6.62 லட்சம்
விஎக்ஸ் ஆட்டோமேட்டிக்: ரூ.7.50 லட்சம்

டீசல் மாடல் விலை விபரம்
இ கிரேடு: ரூ.5.99 லட்சம்
இஎக்ஸ் கிரேடு: ரூ.6.24 லட்சம்
எஸ் கிரேடு: ரூ.6.67 லட்சம்
விஎஸ் கிரேடு: ரூ.7.60 லட்சம்


Click it and Unblock the Notifications








