கவர்ச்சியான விலையில் புதிய ஹோண்டா மொபிலியோ விற்பனைக்கு வந்தது!

By Saravana

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய ஹோண்டா மொபிலியோ கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ரூ.6.49 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து புதிய மொபிலியோ கார் கிடைக்கும்.

பெட்ரோல், டீசல் மட்டுமின்றி ஆர்எஸ் என்ற ஸ்பெஷல் பாடி கிட் கொண்ட மாடலும் இந்தியாவில் கிடைக்கும் என ஹோண்டா தெரிவித்துள்ளது. இது இளம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் மாடலாக இருக்கும். கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.


கூடுதல் விபரங்கள்

கூடுதல் விபரங்கள்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் கூடுதல் விபரங்களை காணலாம்.

வடிவம்

வடிவம்

புதிய ஹோண்டா மொபிலியோ கார் 4.4 மீட்டர் நீளமும், 2.6 மீட்டர் வீல் பேஸ் கொண்டது. மேலும், 189 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக இருப்பதால் இந்திய சாலைநிலைகளை எளிதாக சமாளிக்கும்.

தோற்றம்

தோற்றம்

பிரியோ அடிப்படையிலான மாடல் என்பதால் முன்புற வடிவமைப்புகள் ஒற்றுமைகள் உண்டு. அதேவேளை, பின்புற டிசைனில் வித்தியாசப்படுத்தப்பட்டுள்ளது.

இன்டிரியர்

இன்டிரியர்

டூயல் டோன் வண்ண இன்டிரியர் கொடுக்கப்பட்டுள்ளது. மடக்கிவிரிக்கும் இருக்கைகள் உள்ளதால் பொருட்களுக்கான இடவசதியை அதிகரித்துக் கொள்ள முடியும். சிறந்த ஹெட்ரூம், லெக்ரூம் கொண்டதாகவும் இருக்கும். அதேவேளை, டேஷ்போர்டு உள்ளிட்டவை பிரியோ, அமேஸ் கார்களையே ஒத்திருக்கிறது. டாப் வேரியண்ட்டில் ஃபாக்ஸ்வுட் ஃபினிஷ், லெதர் இருக்கைகள் போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பெட்ரோல் மாடல்

பெட்ரோல் மாடல்

பெட்ரோல் மாடலில் 119 பிஎஸ் பவரையும், 145 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.5 லிட்டர் ஐ விடெக் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டது.

டீசல் மாடல்

டீசல் மாடல்

டீசல் மாடலில் 100 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. ஹோண்டாவின் டீசல் மாடல்களில் கேபினில் அதிக சப்தம் இருப்பதாக ஒரு புகார் இருக்கிறது. ஆனால், மொபிலியோவில் கேபின் சப்தம் மிக குறைவாக இருக்கும் என்று ஹோண்டா தெரிவிக்கிறது. டீசல் மாடலிலும் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ்தான் கொடுக்கப்பட்டுள்ளது.

டெலிவிரி

டெலிவிரி

இன்று முதல் புதிய ஹோண்டா மொபிலியோ காருக்கு முன்பதிவும் துவங்கப்படுவதாக ஹோண்டா தெரிவிக்கிறது.

ஆர்எஸ் மாடல்

ஆர்எஸ் மாடல்

ஆர்எஸ் மாடலில் புதிய பம்பர்கள் மூலம் கவர்ச்சி கூட்டப்ப்டடுள்ளது. புரொஜெக்டர் விளக்குகளுடன் எல்இடி விளக்குகளும் கொடுக்கப்ட்டுள்ளன. அலாய் வீல்கள், குரோம் கதவு கைப்பிடிகள் போன்ற பல கூடுதல் சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இந்த மாடலுக்கு வரும் செப்டம்பர் முதல் டெலிவிரி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டீசல் எஞ்சின் ஆப்ஷனில் கிடைக்கும்.

விலை விபரம்

விலை விபரம்

பெட்ரோல்

இ வேரியண்ட்: ரூ.6.49 லட்சம்

எஸ் வேரியண்ட்: ரூ.7.5 லட்சம்

வி வேரியண்ட்: ரூ.8.76 லட்சம்

டீசல் மாடல்

இ வேரியண்ட்: ரூ.7.89 லட்சம்

எஸ் வேரியண்ட்: ரூ.8.60 லட்சம்

வி வேரியண்ட்: ரூ9.76 லட்சம்

ஆர்எஸ் மாடல்: ரூ.10.86 லட்சம்

More from DriveSpark

Article Published On: Wednesday, July 23, 2014, 15:36 [IST]
English summary
Japanese car maker Honda has launched of its most awaited MPV car Mobilio in India today.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+