ஆல்ட்டோ, இயானுக்கு போட்டியாக வரும் புதிய ஹோண்டா கார்!
ஆல்ட்டோ, இயானுக்கு நேரடி போட்டியை கொடுக்கும் வகையில் சிறிய காரை அறிமுகப்படுத்த ஹோண்டா திட்டமிட்டுள்ளது. ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஹிரோனோரி கனயாமா இந்த தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறார். ஹோண்டா அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருக்கும் புதிய கார் பிரியோவைவிட விலை குறைவானதாக, அதாவது, ரூ.4 லட்சம் ஆன்ரோடு விலையில் இருக்கும் என தெரிகிறது.
தனது தாயகமான ஜப்பானில் மட்டும் கெய் என்ற பிராண்டில் குட்டிக் கார்களை ஹோண்டா விற்பனை செய்து வருகிறது. உலகின் வேறு எந்த மார்க்கெட்டிலும் இந்த கார்கள் விற்பனை செய்யப்படவில்லை. கெய் வரிசையில் என் பாக்ஸ், என் பாக்ஸ்+ மற்றும் என் ஒன் ஆகிய கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த கார்களில் 660சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், கெய் வரிசை கார்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் திட்டம் இல்லை என ஹிரோனோரி கனயாமா தெரிவித்துள்ளார். இந்தியர்களின் ரசனை வேறு, ஜப்பானியர்களின் ரசனை வேறு. இந்தியர்களுக்கு 660சிசி எஞ்சின் கொண்ட கார்களின் மீது அதிக நாட்டம் இருக்காது. எனவே, இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் காருக்கு புத்தம் புதிய எஞ்சினுடன் வரும் என்று அவர் கூறினார். ஸ்லைடரில் ஹோண்டாவின் என் ஒன் காரின் படங்களை காணலாம். இந்த காரின் அடிப்படையில் புதிய கார் வடிவமைக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

ஹோண்டா என் ஒன்

ஹோண்டா என் ஒன்

ஹோண்டா என் ஒன்

ஹோண்டா என் ஒன்



Click it and Unblock the Notifications








