சிஆர்வி அறிமுகத்துக்கு முன்னதாக ஓர் குட் நியூஸ்!

புதிய சிஆர்வி பிரிமியம் எஸ்யூவியை நாளை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது ஹோண்டா. ஆனால், பெட்ரோல் மாடலில் மட்டுமே சிஆர்வி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஐரோப்பிய மார்க்கெட்டில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சினுடன் புதிய சிஆர்வி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் டீசல் மாடல் வராதது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில், அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஜெனீவா மோட்டார் ஷோவில் புதிய சிஆர்வி காருக்கான புதிய 1.6 லிட்டர் டீசல் எஞ்சினை ஹோண்டா அறிமுகப்படுத்த உள்ளது.
இதனால், இந்தியாவிலும் இந்த ஆண்டுக்குள் சிஆர்வி காரில் இந்த புதிய எஞ்சினை பொருத்தி ஹோண்டா விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலகு எடை கொண்ட இந்த புதிய டீசல் எஞ்சின் சுற்றுச் சூழலுக்கு குந்தகம் ஏற்படுத்தாத அம்சங்களுடன் ஹோண்டா உருவாக்கியிருக்கிறது.


Click it and Unblock the Notifications








