ஃபோர்டு வழங்கும் சேமிப்பு சலுகைகள்: நாளை வரை மட்டுமே
அனைத்து கார்களுக்கும் ஒரு லட்ச ரூபாய் வரை சேமிக்கும் வகையிலான சிறப்புச் சலுகைகள் திட்டத்தை ஃபோர்டு அறிவித்துள்ளது. மேலும், ரூ.2.5 கோடி மதிப்பு கொண்ட பரிசு திட்டத்தையும் அறிவித்துள்ளது.
கார் விற்பனையை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகளை கார் நிறுவனங்கள் அடுத்தடுத்து அறிவித்து வருகின்றன. இந்த நிலையில், ஃபோர்டு நிறுவனம் மூன்று நாட்களுக்கான புதிய சிறப்பு சேமிப்பு சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது. நேற்று துவங்கிய இத்திட்டம் நாளை வரை மட்டுமே அமலில் இருக்கும் என்று ஃபோர்டு தெரிவித்துள்ளது.

ஃபோர்டு ஃபியஸ்ட்டா
ஃபியஸ்ட்டா செடான் காரை புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ.74,000 வரை சேமிக்க முடியும். இந்த கார் ரூ.7.42 லட்சம் விலை முதல் கிடைக்கிறது.

ஃபோர்டு ஃபிகோ
நாளை வரை ஃபிகோ காரை முன்பதிவு செய்துகொள்ளும் வாடிக்கையாளர்கள் ரூ.37,000 வரையிலான சேமிப்பு சலுகைகளை பெற முடியும். ரூ.3.89 லட்சம் ஆரம்ப விலையில் ஃபிகோ ஹேட்ச்பேக் கார் கிடைக்கிறது.

ஃபோர்டு கிளாசிக்
கிளாசிக் செடான் காரை முன்பதிவு செய்துகொள்ளும் வாடிக்கையாளர்கள் ரூ.49,000 வரை சேமித்துக் கொள்ள முடியும். ரூ.5.64 லட்சம் முதலான விலையில் கிளாசிக் செடான் கிடைக்கிறது.

ஃபோர்டு என்டெவர்
என்டெவர் எஸ்யூவியை முன்பதிவு செய்து கொள்ளும் வாடிக்கையாளர்கள் ரூ.97,000 வரையில் சேமிக்க முடியும். ரூ.19.65 லட்சம் ஆரம்ப விலை முதல் என்டெவர் எஸ்யூவி கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








