ஹூண்டாய் கார்களுக்கு இலவச சர்வீஸ் முகாம்!

இந்த பரிசோதனை முகாமில் எஞ்சின், பேட்டரி, ஏசி உள்ளிட்ட முக்கிய பாகங்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. உதிரிபாகங்கள், சர்வீஸ் கட்டணத்தில் தள்ளுபடியும் வழங்கப்படுகின்றன.
இதுதவிர, பரிசு கூப்பன் திட்டத்தின் மூலம் பரிசுகளை வெல்லவும் முடியும். மேலும், தினமும் 10 வாடிக்கையாளர்கள் நீட்டிக்கட்டப்பட்ட வாரண்டி திட்டத்தை இலவசமாக வெல்லும் திட்டத்தையும் ஹூண்டாய் அறிவித்துள்ளது.
ஹூண்டாய் கார் உரிமையாளர்கள் இந்த இலவச பரிசோதனை முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அங்கீகாரம் பெற்ற 900 ஹூண்டாய் கார் சர்வீஸ் மையங்களில் இந்த இலவச பரிசோதனை முகாம் நடக்கிறது.


Click it and Unblock the Notifications








