ஹூண்டாய் கார்களின் விலை உயர்வு விபரம்
அனைத்து கார் மாடல்களின் விலையையும் ஹூண்டாய் கார் நிறுவனம் உயர்த்தியிருக்கிறது. இன்று முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயான் பெட்ரோல் மாடலின் விலை ரூ.2,500 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சான்ட்ரோ பெட்ரோல் மாடலின் விலையை ரூ.2,830 வரை உயர்த்தியிருக்கிறது ஹூண்டாய்.

ஐ10 காரின் விலை ரூ.600 முதல் ரூ.900 வரையிலும், ஐ20 பெட்ரோல் மற்றும் டீசல் மாடலின் விலை ரூ.575 வரையிலும் உயர்த்தப்பட்டிருக்கிறது. வெர்னா பெட்ரோல் மற்றும் டீசல் மாடலின் விலை ரூ.1,340 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
எலன்ட்ரா பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.1,740 வரையிலும், சொனாட்டா பெட்ரோல் விலை ரூ.2,813 வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சான்டா ஃபீ எஸ்யூவியின் விலை ரூ.2,813 உயர்த்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








