அதே விலையில் மாற்றங்களுடன் வெர்னா அறிமுகம் - விபரம்
சிறிய மாற்றங்களுடன் கூடிய ஹூண்டாய் வெர்னா கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிட்சைஸ் செடான் மார்க்கெட்டில் விற்பனையில் முன்னிலை வகித்து வரும் வெர்னாவுக்கு நிச்சயம் இந்த கூடுதல் அம்சங்கள் பெரிய பலமாக அமையும்.
அறிமுகம் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிய நிலையில், போட்டியாளர்களை சமாளிக்க இந்த மாற்றங்கள் அவசியமாகியுள்ளது.
சர்வதேச மார்க்கெட்டில் ஆக்சென்ட் என்ற பெயரில் விற்பனையாகும் வெர்னா ஏற்கனவே மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் விற்பனையாகும் மாடலில் சற்று மாற்றங்களை செய்து அறிமுகம் செய்துள்ளது ஹூண்டாய்.

பேக்கலிட் பட்டன்கள்
பவர் விண்டோஸ் சுவிட்சுகளில் இருளிலும் எளிதாக தெரியும் வகையிலான மெல்லிய ஒளிதரும் பேக்கலிட் லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஸ்டீயரிங் வீல் சுவிட்சுகள்
ஸ்டீயரிங் வீலில் பொருத்தப்பட்டிருக்கும் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகளில் பேக்கலிட் விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய அலாய் வீல்கள்
டைமன்ட் கட் டிசைனில் புதிய அலாய் வீல்கள் பொருத்தப்பட்டிருக்கிறது.

ஹெட்ரெஸ்ட் குறைப்பு
பின்புற இருக்கையில் இருந்த மூன்று ஹெட்ரெஸ்ட்டுகளை இரண்டாக குறைக்கப்பட்டுள்ளது.

ஹெட்லைட்
புதிய வெர்னாவில் ஹெட்லைட் டிசைன் மாற்றப்பட்டுள்ளது. பகல்நேர ரன்னிங் விளக்குகளுடன் வருவதாக முதலில் தகவல் வெளியான நிலையில், அதனை ஹூண்டாய் கைவிட்டுவிட்டதாக தற்போது கிடைத்த தகவல் தெரிவிக்கிறது. இருப்பினும், இதுகுறித்து சரியான தகவல் இதுவரை இல்லை.

ஸ்டீல் ஸ்பேர் வீல்
அலாய் வீல் கொண்ட ஸ்பேர் வீலுக்கு பதிலாக இனி ஸ்டீல் ரிம் கொண்ட ஸ்பேர் வீலுடன் வரும். செலவீன குறைப்பு நடவடிக்கையாக இது மாற்றப்பட்டுள்ளது.

விலை
விலையில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. சென்னையில் ரூ.8.54 லட்சம் முதல் ரூ.13.95 லட்சம் வரையிலான ஆன்ரோடு விலையில் ஹூண்டாய் புளூயிடிக் வெர்னா விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








