ரூ.4.66 லட்சம் விலையில் புதிய ஹூண்டாய் எக்ஸ்சென்ட் அறிமுகம்!
ரூ.4.66 லட்சம் என்ற மிக சவாலான விலையில் புதிய ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காம்பெக்ட் செடான் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
முன்னணி ஹேட்ச்பேக் கார்களுக்கு போட்டியை கொடுக்கும் விலையில் வந்துள்ள இந்த புதிய காம்பெக்ட் செடான் பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் விற்பனைக்கு கிடைக்கும். மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் கார்களுக்கு இந்த புதிய ஹூண்டாய் கார் கடும் நெருக்கடியை கொடுக்கும். கூடுதல் விபரங்கள் ஸ்லைடரில் கொடுக்கப்பட்டுள்ளது.

எஞ்சின்
பெட்ரோல் மாடலில் 83 பிஎஸ் பவர் கொண்ட 1.2 லிட்டர் எஞ்சினும், டீசல் மாடலில் 72 பிஎஸ் பவரை அளிக்கும் 1.1 லிட்டர் டீசல் எஞ்சினும் பொருத்தப்பட்டிருக்கிறது.

மைலேஜ்
பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 19.1 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 24.4 கிமீ மைலேஜையும் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோமேட்டிக் மாடல்
பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக கிடைக்கும். டீசல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக மட்டுமே கிடைக்கும்.

விலை விபரம்
பெட்ரோல் மாடல் ரூ.4.66 லட்சம் முதல் ரூ.6.47 லட்சம் வரையிலான விலையிலும், டீசல் மாடல் ரூ.5.56 லட்சம் முதல் ரூ.7.38 லட்சம் வரையிலான விலையிலும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








