'மிஸ்டர் பீன்' காரின் ரிப்பேர் செலவு ஜஸ்ட் ரூ.7.62 கோடி மட்டுமே!!
மிஸ்டர் பீன் என அறியப்படும் காமெடி நடிகர் ரோவன் அட்கின்ஸனின் மெக்லாரன் எஃப் 1 காருக்கு ரிப்பேர் செலவாக ரூ.7.62 கோடியை இங்கிலாந்து இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் செலுத்தியுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு ரோவன் அட்கின்ஸன் ஓட்டிச் சென்ற மெக்லாரன் எஃப் 1 கார் இங்கிலாந்திலுள்ள பீட்டர்பராக் என்ற இடத்தில் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், ரோவன் அட்கின்ஸன் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால், அந்த மெக்லாரன் சூப்பர் கார் பலத்த சேதமடைந்தது. விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து காரின் எஞ்சின் பல மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டது.இந்த நிலையில், விபத்துக்குள்ளான காரை மெக்லாரான் சர்வீஸ் சென்டரில் சரி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த காருக்கு ரிப்பேர் செலவாக ரூ.7.62 கோடியை காருக்கு காப்பீடு கொடுத்த நிறுவனம் செலுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் இன்ஸ்யூரன்ஸ் வரலாற்றில் இதுதான் காருக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச ரிப்பேர் தொகையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், சுவாரஸ்யமான விஷயம் என்ன தெரியுமா? காருக்கு வழங்கப்பட்ட இன்ஸ்யூரன்ஸ் தொகையைவிட காரின் விலை மூன்றில் இரண்டு பங்கு என்பதுதான். விபத்துக்குள்ளான காரையும், மெக்லாரன் எஃப் 1 காரின் படங்களையும் ஸ்லைடரில் காணலாம்.

மிஸ்டர் பீன் சூப்பர் கார்

மிஸ்டர் பீன் சூப்பர் கார்

மிஸ்டர் பீன் சூப்பர் கார்

மெக்லாரன் எஃப் 1 கார்

மெக்லாரன் எஃப் 1 கார்

மெக்லாரன் எஃப் 1 கார்

மெக்லாரன் எஃப் 1 கார்

மெக்லாரன் எஃப் 1 கார்



Click it and Unblock the Notifications








