சென்னையில் இசுஸு எம்யூ7 விற்பனைக்கு அறிமுகம் - முழு விபரம்

சென்னையில் இசுஸு எம்யூ- 7 பிரிமியம் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், திருவள்ளூரில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் ஆலையில் இந்த எஸ்யூவி தயாரிப்பும் துவங்கியது.

தாய்லாந்திலிருந்து பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு இந்த எஸ்யூவி இங்கு அசெம்பிள் செய்யப்படுகிறது. எம்யூ7 எஸ்யூவியை தொடர்ந்து டி மேக்ஸ் பிக்கப் டிரக் தயாரிப்பும் விரைவில் துவங்கப்பட உள்ளது.

விலை

விலை

தமிழகத்தில் இசுஸு எம்யூ7 எஸ்யூவியின் பிஎஸ்-3 வேரியண்ட் ரூ.22 லட்சத்திலும், பிஎஸ்4 வேரியண்ட் ரூ.22.3 லட்சம் சென்னை எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

இசுஸு எம்யூ7 எஸ்யூவியில் 163 பிஎஸ் பவரையும், 360 என்எம் டார்க்கையும் அளிக்கும் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

கருப்பு, வெள்ளை மற்றும் சில்வர் நிறங்களில் இந்த எஸ்யூவி கிடைக்கும்.

உற்பத்தி

உற்பத்தி

ரூ.3,000 கோடி முதலீட்டில் ஆந்திராவில் புதிய தொழிற்சாலையை இசுஸு கட்டி வருகிறது. 2016ம் ஆண்டு இந்த புதிய ஆலை செயல்பட துவங்கும். அதுவரை திருவள்ளூரில் உள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆலையில் ஒப்பந்த அடிப்படையில் இந்த எஸ்யூவி மற்றும் இசுஸு பிக்கப் டிரக் தயாரிக்கப்படும். இதே ஆலையில்தான் மிட்சுபிஷி எஸ்யூவியும் உற்பத்தி செய்யப்படுகிறது.

 சென்னையில் ஷோரூம்

சென்னையில் ஷோரூம்

சென்னையில் புதிய கார் ஷோரூமை இசுஸு திறந்துள்ளது. 2016ம் ஆண்டுகள் நாடு முழுவதும் 60 கார் ஷோரூம்களை திறக்க இசுஸு திட்டமிட்டுள்ளது. டொயோட்டா ஃபார்ச்சூனர் உள்ளிட்ட பிரிமியம் எஸ்யூவி மாடல்களுடன் இசுஸு எம்யூ7 போட்டியிடும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 11, 2013, 10:46 [IST]
English summary
Isuzu Motors, the Japanese commercial vehicle and SUV manufacturer has launched its MU-7 SUV in India. The full size SUV is offered in BS-III & BS-IV engine versions, priced at INR 22 lakhs and INR 22.3 lakhs (Ex-showroom, Chennai) respectively.
மேலும்... #isuzu #mu7 #four wheeler #இசுஸு
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+